மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்திப் பூ!

0
141

செம்பருத்திப் பூ தங்கத்தின் பண்புகளைப் பெற்றுள்ளன. இதன் இதழ்களை தினமும் உண்டு வந்தால் உங்கள் இதயம் இளமையாக இருக்கும். ரத்தக் குழாய்களில் அடைக்கு கொழுப்பு நீக்கும். உடல் எடையை குறைக்கும்.

உங்களை என்றும் இளமை மாறாமல் வைத்திருக்க உதவும். அத்தகைய செம்பருத்திப் பூ பெண்களுக்கு அருமருந்தாகிறது.

கருவளர்ச்சி சரியாக இல்லாமல் இருப்பதால் சில பெண்கள் பூபெய்யாமல் இருப்பார்கள். அவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.அதோடு மாதவிடாய் பாதிப்புகளிய சீர் செய்கிறது. கருத்தரிக்காத பெண்களுக்கு இது நல்ல பலனைத் தரும். அதனைப் பற்றி இப்போது காண்போம்.

விரைவில் பூப்பெய்த :

10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் கொடுத்து வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சீராக மாதவிடாய் வர :

நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக செய்து கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இதனை சாப்பிட வேண்டும். 7 நாட்களுக்கு இப்படி
செய்தால் மாதவிடாய் சீராகும்.

அதிக ரத்தப் போக்கிற்கு :

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும்
அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள்
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

வெள்ளைபடுதலுக்கு :

வெள்ளைப்படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

இதயத்திற்கு :

செம்பரத்தை நான்கைந்து இலைகளை பறித்து கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால்
சர்க்கரை சேர்த்து குடித்துவர இதயம் வலுவடையும். மூளைக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here