ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டாம்..!

1
706

மோடியின் 4.5 வருட ஆட்சியை வெறுத்த நிற்கும் இந்திய மக்கள் இந்தப் பொதுத்தேர்தலை மிக முக்கியமானதாகப் பார்த்து வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் மக்களின் மனதை மாற்றியுள்ளார் மோடி மற்றும் பியூஷ் கோயல்.

பியூஷ் கோயல் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கை அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது. இது பொதுத்தேர்தலில் மோடியின் வாக்கு வங்கி பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

பட்ஜெட் அறிக்கையில் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் 7.5 லட்சம் வரையில் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது தெரியுமா..?

வாங்க தெரிஞ்சிகலாம்..

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் ரூபாய்க்கு 0 சதவீத வரி எனத் தெரிந்த நிலையில், 80சி பிரிவின் கீழ் அதாவது பிபிஎப், என்எஸ்சி, ஈஎல்எஸ்எஸ் பிரிவின் கீழ் செய்யப்படும் முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும்.

இப்பிரிவின் கீழ் அதிகப்படியாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரியில் இருந்து விலக்கு பெற முடியும்.

மாத சம்பளக்காரர்களுக்கு அளிக்கப்படும் standard deduction கீழ் 40000 ரூபாய் வரையிலான வரி விலக்கு தொகையை இந்த பட்ஜெட்டில் 50000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 80டி பிரிவின் கீழ் உங்கள் குடும்பத்திற்கு அடிப்படைத் தேவையான மருத்துவக் காப்பீட்டின் மூலம் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையில் வருமான வரி மிச்சப்படுத்த முடியும். அதாவது உங்கள் பெற்றோர் 60 வயதைத் தாண்டியிருந்தால் 50000 ரூபாய் வரையில் வருமான வரி விலக்கு பெற முடியும்.

இதேபோல் ஓய்வு பெற்ற பின்பு நிலையான வருமானம் அளிக்கும் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு 50,000 ரூபாய் வரையில் வருமான வரி விலக்கு பெற முடியும். இதை 80சிசிடி பிரிவின் கீழ் பெறலாம்.

இதையும் தாண்டி பல முதலீடுகள் நமக்கு வருமான வரி விலக்கு அளிக்கிறது. ஆனால் தற்போது கூறப்பட்டுள்ள அனைத்தும் அடிப்படைத் தேவையைப் பூர்த்திச் செய்யக்கூடியது. தற்போது கூறப்பட்டுள்ள முறையை ன்பற்றி முதலீடு செய்தால் நீங்கள் எளிதாக 7,50,000 ரூபாய் வருமானத்திற்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

மோடியின் 4.5 வருடமாக மோடி பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது, வரி அமைப்புகள் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்து பல ஆயிரம் பேர் தங்களது வர்த்தகத்தை மூடியது மட்டும் அல்லாமல் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து நின்கின்றனர். மேலும் கருப்புப் பணத்தை அழிக்கப்போகிறேன் என்று பணப் புழக்கத்தைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமலாக்கம் செய்து நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதித்தது.

இப்படிப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம், ஆனால் இதை அனைத்தையும் மறக்கடிக்கும் வகையில் மோடி அரசு அறிவித்துள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்பில் சமானிய மக்களைக் கவருக்கும் வகையில் வரி விகிதத்தை மாற்றியுள்ளார்.

1 COMMENT

  1. Standard deduction 50000ஐ விட்டு விட்டார். 10லட்சம் சம்பளம் வந்தால் கூட வரியை தவிர்க்க முடியும். இரண்டு சம்பளம் வந்தால் ஒருவர் இவ்வாறு செய்ய முடியும். 65000 சம்பளம் வாங்கி 20000 investment/insurance எல்லாம் நடைமுறை க்கு ஒத்துவராது. Medical insurance 4000 per month? Too much. It’s not investment. It will be useful only if seriously fell in sick

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here