ரத்த சோகை இருக்கா? இட்லிக்கு தொட்டுக்க இந்த பொடியை யூஸ் பண்ணுங்க!!

0
175

நாட்டில் 50 சதவீத மக்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக
குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது.

ரத்த சோகையால் எப்போதும் சோர்வாக இருக்கும்.அடிக்கடி நோய்வாய்படுவார்கள்.
தலைச்சுற்றல், ஒவ்வாமை உண்டாகும். இவர்கள் அடிக்கடி மாதுளை, பீட்ரூட், முருங்கைக் கீரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இங்கு சொல்லப்பட்டுள்ள முருங்கைப் பொடி புது சுவையாகவும் , ரத்தம் ஊற
வைக்கும் மருந்தாகவும் பயன்படும். குழந்தைகள் விரும்பி உண்பாரகள். இட்லி தோசைக்கு, இட்லிப் பொடிக்கு பதிலாக இந்த முருங்கை இலைப்பொடியை தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

ஸ்டெப்-1 :

முருங்கை இலையைச் சுத்தம்செய்து, கழுவி நிழலிலே வெள்ளைத் துணியில் போட்டு
உலர்த்த வேண்டும்.

ஸ்டெப்-2

முருங்கை இலை மொறுமொறுப்பான பதத்துக்குக் காய்ந்த பின்னர், தவாவில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வெள்ளை எள்ளு, பூண்டு, புளி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப்-3 :

பின்னர், காய்ந்த முருங்கை இலையுடன் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடியாக அரைத்தால், முருங்கை இலைப் பொடி தயார்.

நன்மைகள் :

இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின்
நிறைந்துள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எல்லோருக்கும் ஏற்றது.
சருமத்துக்கு நல்லது. ரத்தச்சோகையைத் தீர்க்கும். கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட இந்தப் பொடியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here