உடல் எடையை குறைக்க ஆசையா? இந்த மேஜிக் மூலிகை தினமும் எடுத்துகோங்க !

0
1333

உடல் எடை குறைக்கதான் பிரயத்தனம் பண்றவங்க பல பேர். தொப்பை குறைய அதுவும் செய்யாத சாகசம் இல்லை. எதை தின்னால் பித்தம் தெளியும் ங்கற நிலைமைலதான் உடல் பருமனானவர்கள் இருக்காங்க.

எது எப்படியோ ஒரு குறிப்பை முயற்சித்துப் பார்த்து, உடனே குறையவிலை என்றால், வேறு குறிப்பிற்கு தாவுதலுங்களுக்கு எந்த பயனும் இல்லை. அது சரியான முறையும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்கும் போது, உடல் அதனை பின்பற்ற சற்று நாட்கள் பிடிக்கும். அதன் பின் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும். ஆகவே பொறுமையுடன் ஒரு குறிப்பை நாடுங்கள்.

அற்புத மூலிகை வைத்தியம் :

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு உடலில் மிக அதிகமாக நச்சுக்களும் இருக்கும். நச்சுக்கள் உங்கள் உடலை அடைத்துக் கொண்டு இருக்கும் போது, உங்கள் உடலிலுள்ள உறுப்புகளின் பணி மெதுவாகும். தேங்கியுள்ள கொழுப்புகள் கரையாது. ஆகவே நச்சுக்கள் வெளியேரும் போது, கொழுப்பும் வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதற்கான அற்புத தீர்வுதான் இந்த மூலிகைகள்

மிக சக்தி வாய்ந்த இந்த மூலிகைகைகளிய தினமும் நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.

மூலிகைகள் :

திரிகடுகு
கஸ்தூரி மஞ்சள்
திரிபலா
குக்குலு

குறிப்பு : குக்குலு என்பது மிகவும் அற்புத உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உடைய மூலிகை.

திரிகடுகு மற்றும் திரி பலா :

திரி கடுகு, திரிபலா ஆகிய மூலிகியப் பொடி 1 ப்சூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். மிக அதிகமாக உடல் எடை கொண்டவர்கள் காலை மாலை என இருவேளை குடிக்கலாம்.

குக்குலு :

குக்குலு ஒரு ஸ்பூன் அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும். இன்னும் அதிக பலன் கிடைக்க, இஞ்சி அல்லது தேன் கலந்து சாப்பிடலம.

கஸ்தூரி மஞ்சள் :

நல்ல தரமான கஸ்தூரி மஞ்சள் கால் ஸ்பூன் எடுத்து, தேன் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம்.

உடல் எடை குறைக்க இந்த மூலிகை குறிப்புகளோடு, நல்ல உணவுப் பழக்கமும் முக்கியம். வேகமாய் கொழுப்பு மற்றும் கலோரி எரிக்கப்படும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

நிறைய சிட்ரஸ் பழங்கள் மற்றும், கீரைகள் சாப்பிட்டு வந்தால், உடல் எடை நீங்களே ஆசரியப்படும்படி குறைவதை காண்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here