வாரம் 3 முறை வெந்தய டீ குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

0
105

வெந்தயம் இல்லாத சமையல் இருக்காது இட்லி மாவு முதல், செய்யும் குழம்பு வரை எல்லாற்றிலும் நாம் வெந்தயம் சேர்க்காமல் சமையல் செய்வதில்லை. அது வாசனை மற்றும் ருசி மட்டுமல்ல மிகவும் சத்துக்கள் நிறைந்தது.

வெந்தயம் கசப்புத்தன்மை கொண்டதால் குறைந்த அளவே நாம் வெந்தயத்தை சேர்க்கின்றோம். அதனால் வெந்தயத்தின் சத்துக்கள் சரியாக நமது உடலுக்கு சேர்வதில்லை. அதன் முழுச்சத்துக்களையும் பெற வெந்தய தேநீர் மிகச் சிறந்ததாக இருக்கும்.

 

தயாரிக்கும் முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

நன்மைகள் :

மாதவிடாய் :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண் குழந்தைகளுக்கு :

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

சர்க்கரை நோய் தடுக்க :

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கொழுப்பு குறைய :

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.

மலச்சிக்கல் :

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

குடல் சுத்தமாக :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

இதயம் :

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here