அகத்திக் கீரையை வாரம் 1 நாளாவது சாப்பிடுங்க? ஏன் தெரியுமா?

0
1490

நமது மன்ணில் விளையும் பாரம்பரிய உணவுகள் எல்லாமே நமது உடலின் மரபணுவிற்கு ஏற்றபடி விளைபவை. ஆனால் நம என்ன செய்கிறோம். மேல் நாட்டுக்காரன் மரபணுவிற்கெற்றபடி அவர்கள் சாப்பிடும் உணவை அதிக பணம் கொடுத்து வாங்குகிறோம். கூடவே நோய்களையும் வாங்குகின்றோம்.

நமது பாரம்பரிய சத்து மிக்க கீரைகள் அற்புத பலன்களை தருபவை. தினசரி முடியாவிட்டாலும் வாரம் இரு நாட்களாவது கீரை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அவ்வாறு அருமையான பலன்களை தரும் கீரைகளில் ஒன்றுதான் அகத்திக் கீரை. இதில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன. அகத்திக்கீரை வாரம் ஒரு நாள் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் என்ன என்று இங்கு படியுங்கள்.

தலைவலிக்கு :

தலையில் நீர்க்கோத்திருந்தால் அதனால் வரும் தலைபாரத்தை வார்த்தையில் சொல்லிடமுடியாது. அப்போது அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நெற்றியில் தடவினால் தலைபாரம் குறையும்.

ஜீரண சக்தி :

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், அல்சர் குணமாகும், மலச்சிக்கலை தீர்க்கும்.

எலும்பு வளர்ச்சி, கண்பார்வை :

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

வயிற்று வலிக்கு :

இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும். * தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும்.

ரத்த அழுத்தம் :

உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here