ஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..!

0
1674

சார்ஜாவில் தற்போது ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்-இன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த லீக்-இல் காபுல் ஸ்வானை மற்றும் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான போட்டியில் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.

ஹஸ்ரத்துல்லா சசாய் காபுல் ஸ்வானை அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் 4-வது ஓவரை அப்துல்லா மஜாரி வீசினார். இந்த ஓவரில் தான் ஹஸ்ரசத்துல்லா 6 பந்துகளிலும் 6 சிக்சர் விளாசினார். அவர் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார்.

மேலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார்.

கிரிக்கெட் உலகில் இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து) ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர். இந்த மாபெரும் சாதனை பட்டியிலில் தற்போது ஹஸ்ரத்துல்லா சசாய்-ம் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here