பெங்களூரில் திகிலூட்டும் 5 இடங்கள்!! சூதானமா போங்க!!

0
51

பெங்களூர் வந்தவர்கள் அதன் குளுமையும், ஊரின் அமைப்பையும், அங்கொய்ருக்கும்
மக்களைப் பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள். அதிக சூடும், அதிக குளிரும்
இல்லாத இடங்கள். முழுக்க மரங்கள் அடர்ந்த அற்புத இஅடங்கள். பழைய மேற்கத்த்திய கலாச்சாரத்தை பறைச் சாற்றும் இடங்கள் என நாகரீகம் குவிந்த இடங்களில் பெங்களூர் மிக முக்கியமான இடம்.

ஆனால் இங்கே பல மர்மங்கள், ஆவிகள் நடமாடும் இடங்கள் இருக்கின்றன.
ஆவிகளைப் பார்த்ததாக பலரும் பீதியை கிளப்ப, அந்த கதைகள் இன்னும் உலவுகின்றன.

அப்படி திலிலூட்டும் இடங்கள் பெங்களூரில் எவையென்று பார்க்கலாமா?

வாஸ் வில்லா- செயின்ட் மார்க்ஸ் ரோடு :

1943 ஆம் ஆண்டு மும்பை ஹை கோர்ட்டின் வக்கிலாக இருந்த வாஜ் என்பவரின்
பங்களாதன இது. அதனை அவரது இரு மகள்களுக்கு கொடுத்திருந்தார். அவரின் மகள்
டால்ஸ் வாஜ் கொல்லப்பட்டார். அவரது மற்றொரு மகள் வீடு தகராறில் இருந்ததால்
வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். இன்னும் அந்த வீட்டில் புழங்கிய பியானோ, கார்,
சோஃபா என எல்லாமும் பாழடைந்த நிலையில் இருப்பதை காணலாம். அந்த வீட்டைக்
கடந்து போக இப்பவும் பலரும் பயப்படுவார்கள். அமானுஷ்ய சத்தங்கள் வருவதாக
கூறுகிறார்கள்.

விக்டோரியா மருத்துவமனை :

விக்டோரியா மருத்துவமனை சிட்டி மார்க்கெட் அருகில் இருக்கும் மிகப்பழமையான
மருத்துவ மனை. அங்கு மொட்டை மாடியிலிருந்து ஒரு பெண் குதிப்பதைப் போல்
இருக்கவும், ஓடிச் சென்று பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்களாம். இப்படி நிறைய பேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

பெங்களூர் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் :

அவ்வளவு பிஸியான விமான நிலையத்திலா என சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
ஆனால் அதையும் தாண்டி இப்படி கதைகள் நிலவுகின்றதே. பெங்களூரில் விமான
நிலையத்திற்கு 1 கி.மி தூரத்திற்கு அப்பல வெறும் காடுதன. காதைக் கிழிக்கும் காற்று.
அங்கு பலரும் ஏதோ ஒரு உருவம் வழிமறிப்பதாக கூறியிருக்கின்றனர். நின்று பார்த்தால் யாருமில்லையாம். எதுக்கும் நீங்க சூதானமா அங்க போங்க.

நாள பா :

பெங்களூரில் 40 வருடங்களுக்கு முன்பு உருவான கதை இது. நாள பா என்றால்
நாளைக்கு வா என்று பொருள். ஏதாவது ஒரு குடியிருப்பு பகுதிக்கு சென்று ஒவ்வொரு
வீட்டின் கதவையும் தட்டுமாம். குடியிருப்பவர்கள் கதவை திறக்காமல், பயப்படாமல்
நாளைக்கு வா என்று சொல்லி அனுப்பி விடுவரகளாம். தப்பி தவறி கதவை திறந்தோம்.
போச்ச்ச்..

கல்பல்லி கல்லறை :

கல்பல்லி கல்லறை பெரிய கல்லறைத் தோட்டம். இது சர்வக்ன நகரில் இருக்கிறது.
இங்கிருந்து அவ்வப்போது அலறல்கள் கெட்டுக் கொண்டிருக்குமாம். அங்கு கடந்து
சொல்வரகள் அருகில் வசிப்பவர்கள் பலரும் அந்த அனுபவத்தை சந்தித்திதாக
சொல்லுகிறார்கள். இரவில் அதனை கடந்து செல்பவர்கள் திக் திக்கோடுதான்
செல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here