அரை மூடி எலுமிச்சை, உங்க முடியை அடர்த்தியாக்கலாம்! எப்படி?

0
4599

முடி அழகு முக்கால் அழகு என்பது மிகவும் உண்மை. எத்தனை அழகாக இருந்தாலும் எலிவால் மாதிரி முடி இருந்தால், எல்லாமே வாஷ் அவுட் ஆயிடும்.
எப்படி கூந்தல் அடர்த்தியை அதிகமாக்கலாம் என பலவித ஷாம்புக்கள், மாஸ்க் எல்லாம் ட்ரை பண்ணிருப்பீங்க. ஆனா வீட்டில் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை உங்கள் கூந்தலுக்கு அற்புதங்களை தரும் ஆற்றல் கொண்டவை.

அவற்றிலுள்ள சத்துக்கள் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல கூந்தல் வலிமைப் பெறவும், அடர்த்தி கிடைக்கவும் மிகவும் உபயோகப்படுகிறது.
அதனை எப்படி பயன்படுத்தலாம் என இந்த குறிப்புகளில் பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் கற்றாழை :

தேவையானவை
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

செய்முறை :
எலுமிச்சை சாற்றில் கற்றாழை ஜெல்லை கலந்து தலைமுடியில் தடவுங்கள். 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள்
கழித்து தலைமுடியை குளிர்ந்த நீரால் அலசவும்.
வாரம் இருமுறை செய்தால் முடி உதிர்தல் நின்று அடர்த்தி பெறும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் :

எலுமிச்சை சாறு – அரை மூடி

ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்.

செய்முறை :

எலுமிச்சை சாற்றினில் ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சம அளவு கலந்து கொள்ளுங்கள். அதனை ஸ்கால்பில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நேரமிருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம் அல்லது வாரம் இரு நாட்கள் செய்யுங்கள். நல்ல பலனைத் தரும்.

பொடுகைப் போக்க :

பொடுகை முற்றிலும் போக்க எலுமிச்சை மிகச் சிறந்த பலன்களை தருகிறது. எலுமிச்சை தோலை தலைமுடியின் வேர்க்கால்கள் முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசுங்கள்.

கூந்தல் பளபளப்பு பெற:

தேவையானவை :
எலுமிச்சை சாறு
வினிகர்

செய்முறை :

எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடி முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசவும்.இப்படி செய்தால் டல்லான கூந்தல் மிகவும் பொலிவு பெறுவது உறுதி.

கண்டிஷனராக :

தேவையானவை :
எலுமிச்சை – அரை மூடி
முட்டை – 1
ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு அதில் எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தலை முடி முழுவதும் தடவுங்கள். தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி முக்கால் மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசவும். மிக
பலன்களைத் தரும். கூந்தல் அற்புதமாக மிளிரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here