முடி அடர்த்தியாக வேணுமா? கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0
3005

முடி சிலருக்கு நீளமாக இருக்கும். அடர்த்தியாக இல்லை என்பது பெரிய குறையாக இருக்கும். முடி குறைவாக இருந்தாலும், நீளமாக இருந்தாலும் சரி.. அடர்த்தியாக இல்லை என்றால் நன்றாக இருக்காது. முடி அடர்த்தியாக்க நமது ஆயுர்வேதத்தில் நிறைய இயற்கை மருத்துவங்கள் இருக்கின்றது. அதில் ஒன்றுதன கடுகு எண்ணெய்.

பொதுவாக வட இந்தியாவில் எல்லாருக்குமே முடி நேராக மிருதுவாக அடர்த்தியாக இருக்கும், இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கடுகு எண்ணெய்தான் காரணம். கடுகு எண்ணெயை எப்படி அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

கடுகு எண்ணெயில் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளது. இது புதிய முடி வளர்ச்சியை தூண்டுகின்றது. பொடுகை நீக்கும். முடியின் கருமையை அதிகப்படுத்தும். கடுகு எண்ணெயிலுள்ள விட்டமின் ஈ, கே போன்றவை  முடி வளர்ச்சிக்குத் தேவையானவை.

கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் :

வாசனை மற்றும் நிறம் சேர்க்காத சுத்தமான யோகார்ட் வாங்கிக் கொள்ளுங்கள். இதில் கடுகு எண்ணெய் சேர்த்து, நன்றாக கலந்து தலை முடியின் வேர்க் கால்களில் தடவுங்கள். பின்னர், சூடான நீரில் முக்கிய டர்க்கி டவலை பிழிந்து, பின் தலையைச் சுற்றிலும் கட்டிக் கொள்ளவும்.அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

கடுகு எண்ணெய் மற்றும் கற்றாழை பேக் :

கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மசித்து, அதில் வெதுவெதுப்பான கடுகு எண்ணெயை கலந்து தலை முடியில் தடவுங்கள். நன்றாக சில நிமிடம் மசாஜ் செய்த பின் 40 நிமிடங்கள் கழித்து, தலைமுடியை அலச வேண்டும்.

கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :

வெந்தயத்திய பொடி செய்து கொளுங்கள். அரை மூடி எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் . இவ்விரண்டையும், கடுகு எண்ணெயுடன் கலந்து தலை முடியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

கடுகு எண்ணெய் மற்றும் வாழைப் பழம் :

நன்றாக பழுத்த வாழைப் பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். இதில் கடுகு எண்ணய் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து, கொண்டு, இந்த கலவையை தலை முடியில் தடவி, அரை மணி நேரத்தில் காய்ந்ததும், தலை முடியை அலசுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here