காதலர்களை மிரட்டி ஓட வைத்த பஜ்ரங் தள் அமைப்பு..!

0
195

உலகம் முழுக்க இன்று காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இதை சில இந்து அமைப்பினர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

காதலர்களை மிரட்டி ஓட வைத்த பஜ்ரங் தள் அமைப்பு..!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்பதி ஆற்றங்கரையில் உள்ள பூங்காவில் இன்று காதல் ஜோடிகள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தடிகளுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டபடி, ஆற்றங்கரையருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்களை மிரட்டி ரகளை செய்தனர். ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த சிலரை விரட்டியடித்தனர். பயந்துபோன காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடினார்கள். 10 நிமிடங்கள் அவர்கள் அந்தப் பகுதியில் கலாட்டா செய்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்ததும் அவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ரகளை செய்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். எனினும், சிலர் தப்பியோடிவிட்டார்கள். பஜ்ரங் தள் அமைப்பின் அகமதாபாத் நகர துணைத்தலைவர் நிகுன்ஜ் பரேக் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here