மலட்டுத்தன்மையை போக்கி, கர்ப்பப்பையை பலப்படுத்த தினமும் ஒரு கிளாஸ் இதக் குடிங்க – ஒரு நாட்டு மருத்துவம்!!

0
46

இன்று நாட்டில் பெண்களைத் தாக்கும் நோய்களில் அதி முக்கியமானது கர்ப்பப்பை புற்று நோய்தான். நீங்கள் நினைத்துப் பாருங்கள். போன நூற்றாண்டு வரை கர்ப்பப்பை புற்று நோய் என்பதே இல்லை. இன்று எப்படி திடீரென வந்தது. எது காரணம்? அதே ஊர், அதே காற்று, அதே பூமிதான். ஆனாம் என்ன மாறியது? நமது வாழ்க்கை முறை, உணவு முறை. இவைதான் மாறியுள்ளது.

உண்மையாகச் சொல்லப்போனால் பெண்களின் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது. குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும்போது கர்ப்பப்பைக்கு அதிக ரத்தம் பாய்ந்து அவை நச்சுக்களிய அழித்து கர்ப்பப்பையை வளமோடு வைத்திருந்தது.

இன்று வேலைப்பளு மிக அதிகம், ஆனால் உடல் உழைப்பிற்கு இல்லை. மூளைக்குதான் வேலைப்பளு. அமர்ந்தபடியே கணிணி வேலை, மன அழுத்தம்  எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு அயர்ச்சியை தருகின்றது.

அடுத்து உணவுப் பழக்கம். சுரைக்காய், பரங்கிக் காய், பீர்க்கங்காய், போன்ற நாட்டுக் காய்கள் கர்ப்பப்பையை பலப்படுத்தியது. இன்று நாம் சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும் ரசாயனம் கலந்த உரங்களால் விளைவிக்கப்பட்டது. அதோடு வேலைப்பளு காரணமாக துரித உணவுகளுக்கும், ஜங்க் உணவுகளுக்கும் பழக்கப்படுத்திக் கொண்டோம். இவையெல்லாம் பெண்களின் உயிரோட்டமாக விளங்கும்.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் கர்ப்பப்பையின் இயக்கங்களைப் பாதிக்கிறது. விளைவு, விரைவில் பூப்பெய்தல், முறையற்ற மாதவிடாய், மலட்டுத் தன்மை புற்று நோய் என பலபிரச்சனைகள் தலைதூக்குகின்றன.

காலம் மாறியதற்கு இனி புலம்பி பிரயோசனமில்லைதான். ஆனால் நீங்கள் உங்கள் கர்ப்பப்பையை பலப்படுத்துவதற்கான சிரத்தை எடுத்துக் கொண்டால் உங்கள் எதிர்காலத்திற்கும், வரப்போகும் சந்ததிதிக்கும் நல்லது.

இந்த நாட்டு மருத்துவத்தை பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கர்ப்பப்பையை வலுப்படுத்தி, மலட்டுத்தன்மையை நீக்கும்.

தேவையானவை :

சம அளவு கீழ்கண்டவைகள்

பாதாம்,
பூசணி,
நாட்டுச் சர்க்கரை,
பால்,

தயாரிக்கும் முறை :

பாதாம், பூசணி விதை, நாட்டு சர்க்கரை, பால். பாதாம் பருப்பு மற்றும் பூசணி விதைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த
கலவை ஒரு ஸ்பூன், சிறிது நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இதை குடித்துவண்தால் கர்ப்பப்பை, சினப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும்.

அமுக்கராங்கிழங்கு :

தேவையான பொருட்கள்:

அமுக்கரா கிழங்கு,
பனங்கற்கண்டு,
பால்.

 

செய்முறை

அமுக்கராங்கிழங்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு எடுத்து கொண்டால் ஹார்மோன் குறைபாடு, மலட்டு தன்மை சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here