முகப்பரு தழும்பை வேகமாக மறைய வைக்கும் பாட்டி வைத்தியங்கள்!!

0
1876

முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் நமது பாட்டி வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

வெந்தயம் :

வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி முகத்தில் தடவுங்கள். தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் மஞ்சள்:

ஆலிவ் எண்ணெயை கஸ்தூரி மஞ்சள் குழைத்து தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

பன்னீர் :

பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

வெந்தய நீர் :

சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here