உங்க பாஸ்வோர்டு ஹேக் செய்யப்பட்டதா..? கூகிள் அளிக்கும் புதிய சேவை.!

0
435

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது வாசகர்களிடம் இருந்து அடிக்கடி சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவதும், தகவல் திருட்டும் தான்.

இதனைத் தடுக்கப் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் கூகிள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து நேரடி தகவல்களை அளிக்கப் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய சேவை பற்றிக் கூகிள் கூறுகையில், தற்போது நாங்கள் வெளியிட்டுள்ள சேவையின் மூலம் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு ஹேக் செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து கூறும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையை வாடிக்கையாளர் க்ரோம் ஸ்டோரில் இருக்கும் எக்ஸ்டென்ஷன் பிரிவில் பாஸ்வோர்டு செக்அ பெயரில் பெற்றுக்கொள்வது மட்டும் அல்லாமல், இந்த எக்ஸ்டென்சன் கூகிள் க்ரோம் சேவையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது கூகிள்.

இப்புதிய சேவையின் மூலம் கூகிள் கணக்குகள் பாதுகாப்பாக, ஹேக்கிங் தாக்குதல்கள் எதுவும் இல்லாமல் சிறப்பான பாதுகாப்பை அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் கூகிள் அறிவிப்பில், கவுடச்சொல் ஹேக் செய்யப்பட்டால் உடனடியாகக் கூகிள் நிறுவனம் உங்கள் பாஸ்வோர்டை ரீசெட் செய்துவிட்டுக் கூடுதலாகக் கணக்கையோ அல்லது தகவல்களைப் பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கூகிள் தனது வாடிக்கையாளர்களுக்கு வலிமையான பாதுகாப்பை அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here