ஆண் என்று கூறி 3 பெண்களை திருமணம் செய்த பெண்!

0
583

ஆண் என்று கூறி 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண் என்று கூறி 3 பெண்களை திருமணம் செய்த பெண்!

ஆந்திரா மாநிலத்தை கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடு அருகில் உள்ள இடிகலபாடுக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி என்ற பெண். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

18 வயதாகும் ரமாதேவி தன்னை ஆண் போல மாற்றிக்கொண்டு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு, கடந்த 2 வருடங்களில் இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். ஆண் போல் மாறிய ரமாதேவி ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன் தனக்கு அவசர வேலை இருப்பதாக கூறிச் சென்று விடுவாராம். ஆனால் இவர் திரும்பி வந்ததே இல்லை.

இந்நிலையில் 3 வது நிர்மலா என்ற பெண்ணையும் திருமணம் செய்துவிட்டு வழக்கம்போல தலைமறைவானார். இதனையடுத்து ரமாதேவியின் மீது நிர்மலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ரமாதேவியை கைது செய்துள்ளனர். பின்னர் போலீசார் பாணியில் விசாரித்தபோது உண்மைகள் உடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here