கம்பியூட்டருக்கு இணையாக ஸ்மார்ட்போன்.. சாம்சங் அதிரடி..!

0
565

ஸ்மார்ட்போனின் அதிரடி வளர்ச்சியால் டேப்லெட்-இன் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. இப்படிப் பல பொருட்களின் பயன்பாட்டை ஸ்மார்ட்போன் விழுங்கியுள்ளது, இதன் வரிசையில் தற்போது கம்பியூட்டருக்கு இணையாக ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் இறங்கியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தில் இருந்து கசிந்த தகவல்கள் படி, இந்நிறுவனம் தற்போது எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனின் மாதிரி வடிவத்தைத் தயாரித்து வருகிறது. ரெட்மி, ஓன்பிளஸ், ஆப்பிள் நிறுவனங்களுடன் ஒரு முனையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற மலிவான போன்களைத் தயாரித்து அதனை உலகளாவிய சந்தையில் விற்பனை செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

மறுபுறம், இதே சாம்சங் அதிநவீன மொபைல் தொழில்நுட்பத்தில் பயணியாற்றியும் வருகிறது. இதன் அடிப்படையில் அடுத்தாகச் சாம்சங் தயாரிக்க உள்ள எஸ்10 ஸ்மார்ட்போன் ஒரு கம்பியூட்டருக்கு இணையான ஒரு தயாரிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

எஸ்10 மாடலில் 3 போன்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது, இதில் ப்ரீமியம் போனாக வெளியாகும் போன் 12 ஜிபி ரேம் மற்றும் ஜிபி இல்லை 1 டிபி சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும் என அறிவித்துள்ளது.

மேலும் எஸ்10 மாடல் போன் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் போன்களைத் தயாரிக்க உள்ளது. இதில் 6.4 இன்ச் போனில் மட்டும் 2 செல்பி கேமரா இருக்கும் எனவும் மீதமுள்ள போன்களில் ஒரேயொரு செல்பி கேமரா மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன் அதிகப்படியான விலை 60,000 முதல் 70,000 ரூபாய் வரையில் இருக்கும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

12ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு என்பது இன்றைய அதிக நவீன கம்பியூட்டருக்கு நிகரானது. ஆனால் சாம்சங் தயாரிக்கும் இந்த ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here