வயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கும் பழங்கள்!!

0
50

திருமணம் என்று ஆனாலே ஆண்களுக்கு தொப்பை விழுவதும், பெண்களுக்கு இடுப்பு
பெருத்துவிடுவதும் பெரும்பாலோனோருக்கு நிகழ்வது. குறிப்பாக 30 வயது ஆனதும்
உடல் பருமனை குறைப்பதுதான் பெரும்பாலோனோரின் முதல் டார்கெட்டாக இருக்கும்.

ஆண்கள் பேச்சுலராக இருக்கும்போது சரியாக உணவை சாப்பிடாமல் அலைந்து,
திரிந்து பெருமளவு தங்கள் வேலையை தாங்களே வேலை செய்து கொண்டிருந்ததால்
உடல் பருமன் அதிகமாயிராது.

ஆனால் திருமணம் ஆனதும், தனக்கென்று சேவை செய்ய ஒருத்தி வந்துவிட்டாளென
வீட்டின் எந்த வேலைகளிலும் பங்கேற்காமல் அமர்ந்தபடி மொபைல் நொண்டிக்
கொண்டு, மனைவி செய்யும் உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்டு, டிவி முன் தவம்
கிடப்பதால் மெல்ல மெல்ல தொப்பை உண்டாகி, 30களின் இறுதிகளிலே தொப்பையும்
தொந்தியுமாக இருக்கிறார்கள். அதனை குறைக்க அந்த டயட், இந்த டயட்,ஜிம் என தேடி அலைவதும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், ஏயும் உடல் அதன் பின் எந்த காலத்திலும்
பெரும்பாலோனோருக்கு இறங்காது. ஒன்று கர்ப்பமாக இருக்கும்போதும். குழந்தை
பிறந்த பின்னும் ஓவர் டயட் எடுத்துக் கொள்வார்கள். பொதுவாக குழந்தை பிறந்த பின்
சில காலத்திற்கு ஹார்மோன் சம நிலையற்று கானப்படும். அந்த சமயத்தில் கொழுப்பு
சரிவர எரிக்கப்படாமல் வயிறு இடுப்பு பகுதிகளில் சேமிக்கப்படும்.

சில வீடுகளில் குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆனாலும் வீட்டில் வேலை செய்ய
விடாமல் அப்படியே பெண்களை பொத்தி வைப்பார்கள் இது தவறு. முதல் மூன்று
மாதங்களுக்குப் பிறகு(ஸிசேரியனுக்கும் பொருந்தும்) குனிந்து நிமிர்ந்து நன்றாக வேலை செய்தால் , கொழுப்பு சேமிக்கப்படுவதை தடுக்கலாம்.

அதோடு எந்த மாதிரி உணவுகள் சாப்பிட்டால் வேகமாக கொழுப்பு கரையும் என உங்கள்
அனுபவத்தில் தெரிந்து கொண்டு, அதனை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை ,
இடுப்பு கொழுப்பு குறைவதில் நல்ல மாற்றங்கள் காணலாம். அப்படியான உணவுகளை
நாங்கள் பரிந்துரைக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி,எலுமிச்சை சாறு :

தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு
கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை
குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்
நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்.

திராட்சை :

ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத்
தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

 

அன்னாசிப் பழம் :

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி
முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண
சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல்
எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

தக்காளி :

கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி
துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமகா மெட்டபாலிசத்தை
தூண்டுகிறது. இதனல கொழுக்கு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது தக்காளி சாறு அல்லது
சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.

பப்பாளி :

தினமும் பப்பாளியை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இயற்கையாகவே
ஜீரணிக்கச் செய்யும் பெப்பெய்ன் என்ற நொதியைக் கொண்ட பப்பாளி, கொழுப்பை
குறைக்கச் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here