சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பாக்கப் போறீங்களா? இதை தெரிஞ்சிக்குங்க!

0
5751

தமிழகம் முழுக்க காவிரி கோரிக்கை மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், போட்டியை காணச்செல்லும் ரசிகர்களுக்கு அதிக அளவிலான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

3000 போலீஸ்:
ஐ.பி.எல். போட்டிக்காக மொத்தம் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மைதானத்திற்குள் மட்டும் 2000 போலீசார் குவிக்கப்பட்டிருப்பர். மைதானத்திற்கு வெளியே 500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரார்களின் பாதுகாப்பிற்காக 500 போலீசார் நிற்பார்கள்.

வாட்டர் பாட்டில்:
மைதானத்திற்குள் அமர்ந்து போட்டியை காண உள்ள ஆடியன்ஸுக்கு தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை போடப்பட்டிருக்கிறது. மாறாக உள்ளே தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

கேமரா காட்டாது:
மைதானத்திற்குள் சென்று கிரிக்கெட் போட்டிக்கு எதிராக வாசகங்களை எழுதியோ, வரைந்தோ காண்பித்தால் நோ ப்ராப்ளம் என்கிறார்கள். எதிர்ப்பு குரல்கள், வரைபடங்கள் எதுவும் டிவியில் காண்பிக்கப்படாது.

நோ செல்போன்:
மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்போன் கொண்டுசெல்லக் கூடாது. அங்கிருந்து புகைப்படம் அல்லது தகவல்களை அனுப்பி வெளியில் உள்ள போராட்டக் காரர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்பதால் செல்போனுக்கும் தடை போட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here