இந்த பொருட்களை இனி எப்போதும் கடையில வாங்கிடாதீங்க!! எச்சரிக்கை!!

0
54

உணவு, கல்வி என்று நாட்டின் மிக அத்யாவசிய் தேவையானவைகள் கூட வியாபரம் ஆகிவிட்டது. அதிலும் உண்ணும் உணவை வியாபரம் ஆக்கியது கொடுமை. அதிலும் பேராசையின் உச்சக்கட்டம்தன இந்த விளம்பரங்கள்.

நீங்கள் கடையில் வாங்கும் ஒரு உணவுப் பொருளில் ரசாயனங்கள் கொண்ட வாசனைகள், நிறங்கள், கெட்டுப் போகாமல் இருக்க ப்ரசர்வேட்டிவ் இதெல்லாம் மிகையாக சேர்த்த பின்புதான், அந்த உணவின் பகுதி கொஞ்சம் இருக்கும் .இதைத்தான்  நாம் சுவைத்து சாப்பிடுகிறோம்.

அப்படி நீங்கள் வாங்கவே கூட உணவுப்பொருட்கள் உண்டு. இவற்றை ஏன் வாங்கக் கூடாது என்று பார்க்கலாம்.

ப்ளூபெர்ரி உணவுகள் :

ஐஸ்க்ரீம், சாக்லெட், ஜெல்லி , யோகர்ட் என நிறைய உணவுகள் ப்ளூபெர்ரி நிறத்தில் வருகிறது. ஆனால் உண்மையில் அவற்றில் ப்ளூ மற்றும் சிவப்பு நிற சாயத்தையே சேர்க்கிறார்களாம். .இவை உடலுக்கு என்ன மாதிரி கெடுதலை தருமென்பதை சொல்லித் தெரிய வேண்டுமென்பதில்லை.ஸோ மக்களே எச்சரிக்கை.

ஆரஞ்சு ஜூஸ் :

அதிர்ச்சியா இருக்கா. ஆனா உண்மைங்க. கம்பெனிகளில் ஆரஞ்சு ஜூஸ் தயாரித்து, பதப்படுத்தப்பட்டு, ப்ரோசஸ் செய்து, கிட்டத்தட்ட 8 மாதங்கள் “டேங்கில் ” கிடத்தப்பட்டுதான் மார்கெட்டிற்கு” ஃப்ரெஷ் ” என்ற பெயரில் வருகின்றது.

வனிலா :

சும்மா டைம் பாஸிற்கு ஏதாவது இனிப்பு, மில்க் ஷேக் அல்லது ஐஸ்க்ரீம் செய்யனும்னு ஆசைப்படுவீங்க. ஆனா நம்ப மாட்டீங்க. நீங்க
கடையில் வனகும் வனிலா உண்மையில் வனிலாவே இல்லை. வன்னிலின் எனப்படும் ரசாயனம் வனிலாவின் ஃபார்முலாவை ஒத்தது. அதனால் அதனைப் போலவே நிறம் வாசனை இருப்பதால் அதனைத்தான் சேர்க்கிறார்கள். ஏனெறால் இயற்கயாக வனிலா மிகவும் காஸ்ட்லியானது. இந்த் ரசாயன வன்னிலின் விலையில் சல்லீசானது. இப்ப புரிஞ்சுதா.

காஃபி க்ரீமர் :

காப்பசீனோ, கோல்ட் காபி என எதுவா இருந்தாலும் அதில் டாப்பிங்கில் ஹார்டின் அல்லது பிடித்தது போல் க்ரீம் லேயர் அலங்கரித்து தந்தால் யாருக்குத்தான் குடிக்க ஆசையில்லாமல் இருக்காது. உண்மைதான்.ஆனா பாருங்க.. அந்த க்ரீம் உண்மையில் பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதில்லை. முற்றிலும் மிகக் கேடுவிளைவிக்கும் ட்ரான்ஸ் ஃபேட் கொண்ட செயற்கை தயாரிப்பு.

ரெடிமேட் காய்கறி , பழத் துண்டுகள் :

இப்போது இருக்கும் பிஸி உலகில் காய்கறி, பழங்களிய நறுக்கக் கூட டைம் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு , சோம்பேறித்தனப்பட்டு, மார்க்கெட்டுகளில் விற்கும் ஏற்கனவே நறுக்கி பேக் செய்யப்பட்ட ரெடிமேட் காய்கறி, பழ வகைகளில் மிக
அதிகமாக கிருமிகள் தாக்குகின்றதாம். இவை உங்கள் இரைப்பைக்கு மோசமான விளைவுகள் தரும். இவற்றை சாப்பிடுவதற்கு பேசாமல் வெறும் தயிர் சாதமாவது சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here