காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க!! உடல் எடை வேகமா குறையும்!!

0
1348

காலையில் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடல் எடையை முடிவு பண்ணும். காலையில் சாப்பிடும் உணவுகள் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நோய் நொடியில்லாமல் பாதுகாக்க முடியும். எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம்.

ஏன் காலை உணவு சாப்பிடாமல் இருந்தல உடல் பருமனாகிறது?

மற்ற நேரங்களை விட காலை உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரங்களில் நம்முடைய மெட்டபாலிசம் மாறுதல் அடைகிறது. ஏதாவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் அப்படி செய்யும் போது, நமது கல்லீரல் அடுத்து தினமும் சாப்பிடும் உணவுகளை கொழுப்பாக உடலில் சேமிக்க பழகிக் கொள்ளும். இப்படி மெட்டபலைசம் மாறும் போது உடல் பருமனாகிறது. ஆகவேதான் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவறக் கூடாது என்று சொல்கிறார்கள்.

உடல் பருமனாக இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு சாப்பிட்டால் உடல் எடை குறைக்கும் என்று தெரிந்து கொண்டு அவற்றிய பின்பற்றினால் உடல் எடை கணிசமாக குறையும். அம்மாதிரியான உணவுகளை உங்களுக்காக ஸ்பார்க் டிவி பரிந்துரைக்கின்றது. வாருங்கள் பார்க்கலாம்.

முதல் நாள் காலை உணவு :

ரொட்டீன் உணவுகளை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லப் பழக்கம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு க்ரீன் டீ அல்லது விருப்பம் இருந்தால் பல குடிக்கலாம். பின்னர் 8 மணி அளவில் இரண்டு ஸ்லைஸ் பிரட் டோஸ்ட், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஒரு கிவி பழம் சாப்பிடலம்.

2 ஆம் நாள் காலை உணவு :

காலையில் பால் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட காபி அல்லது டீ, வேக வைத்த முட்டை, யோகர்ட் ஒரு கப் மற்றும் ஒரு முழு வாழைப் பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம்.

3 ஆம் நாள் காலை உணவு :

காலையில் பால் அல்லது டீ, பின்னர் பிரட் டோஸ்ட் 2 , வேக வைத்த முட்டை, ஊற வைத்த சீயா விதைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

4 ஆம் நாள் காலை உணவு :

வெதுவெதுப்பான நீரில் தேன், பின்னர் அரை மணி நேரம் கழித்து பால், பின்னர் வேக வைத்த முட்டை, அவகேடோ, சியா விதைகள், ஒரு ஸ்லைஸ் பிரட், போன்றவை சாப்பிடுங்கள்.

5 ஆம் நாள் காலை உணவு :
பால், சீஸ் கூடிய ஸ்லைஸ் பிரட், வேக வைத்த பசலை கீரை சாலட்,

6 ஆம் நாள் காலை உணவு :

தேனீர், பிரட் ஒரு சிலைஸ், ஒரு முட்டை, அவகாடோ பழம் மற்றும் திராட்சை ஜூஸ்

இவற்றில் பிரட் தேர்ந்தெடுக்கும் போது, முழு தானிய அல்லது கோதுமை பிரட் மட்டுமே சாப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here