பார்வைக்குறைபாடு இருக்கா? இப்படி செஞ்சா பார்வைத் திறன் அதிகரிக்கும்!!

0
99

கண் மருத்துவத்திற்கும் பல மருத்துவத்திற்கும் நாட்டில் பஞ்சமில்லை. அதனை வணிக மயமாக்கிவிட்டன்ர். குறிப்பாக இப்போது சிறு வயது குழந்தைகளே கண்ணாடி போட வேண்டிய நிலைமை. இதற்கு காரணம் அவர்கள் தொடர்ந்து அலைபேசி பயன்படுத்துவதால்தான் என உங்களுக்கே தெரியும். இருப்பினும் எதனால் பிள்ளைக்கு பார்வை குறைபாடு என்று போய் மருத்துவரைப் கேளுங்கள்.

” மொபைல், ஐ பாட் பார்ப்பதனால் கண் பார்வை குறையாது. சுற்றுப் புற மாசுகேட்டினாலும், ஊட்டச்சத்து குறைவினாலும்தான் ஏற்படும் என்று சொல்வார்கள்.

உண்மையில் அது காரணமில்லை. அவர்களின் மருத்துவத்துறை முன்னேறவேண்டும் என்பதற்காக சொல்லும் பொய் அது.

நாமும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலும், மாசு நிறைந்த காற்றிலும் விளையாடியிருப்போம். நமக்கு வராத கண் பார்வைக் குறைபாடு பிள்ளைகளுக்கு வருகிறதென்றால் அவர்களின் புதிதாக வந்த ஒரு பழக்கமாகத்தானே இருக்கும்..

சூர்ய ஒளி :

கண் பார்வை தெளிவடையவும், கூர்மையாக இருக்கவும், அந்த காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்தார்கள். அதிகாலை சூரியனிடமிருந்து வரும் ஊட்டமிகு கதிர்கள் கண் பார்வையை பலப்படுத்தும்.

பாதாம் பருப்பு :

பாதாம் பருப்பு மற்றும் மிளகை எடுத்து நன்றாக பொடித்து தினமும் 2 முறை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

ஆப்ரிகாட் மற்றும் வாழைப்பழம் :

மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

பசும்பால் :

பசும்பாலை தொடர்ந்து ஒரு மண்டலம் இரவில் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும். குறைபாடு இருந்தாலும் குணமாகும்.

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மணத்தக்காளி :

மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

கீரை எண்ணெய் :

பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைச்சூடு தணிந்து,பார்வைக் கோளாறுகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here