விஷாலுக்கு பணியாத தமிழ்ராக்கர்ஸ் இளம் இயக்குனருக்கு தலைவணங்கியது!

0
8040
விஷாலுக்கு பணியாத தமிழ்ராக்கர்ஸ் இளம் இயக்குனருக்கு தலை வணங்கியது!

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் கன் போன்ற இணையதளத்தில் புதிய படங்கள் அன்றே பதிவேற்றம் செய்யப்படும். இந்த இளையதளங்கள் மூட வேண்டும் என்று சினிமாவை சேர்ந்த பலரும் குரல் கொடுத்துவந்தனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் போலிஸ் தமிழ் ராக்கர்ஸ் எதிராக புகார் மனு கொடுத்துள்ளார். எதுக்கும் அடிபணியாத தமிழ்ராக்கர்ஸ் படங்களை தனது இணையதளத்தில் பதிவேற்றிக் கொண்டே இருந்தது. சமீபத்தில் வெளியான சென்னை2சிங்கப்பூர் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியானது. இதனை அறிந்த அப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் ஒரு வீடியோ பேசி வெளியிட்டார். அதில் அவர் தன் முதன் முதல் இயக்கிய சென்னை2சிங்கப்பூர் படம் தங்கள் தளத்தில் பதிவெற்றியுள்ளிர்கள். எங்களுக்காக ஒரு 30 நாட்கள் மட்டும் படத்தை நீக்க வேண்டும். 31 வது நாள் மீண்டும் பதிவேற்றிக் கொள்ளுங்கள். இந்தபடம் 6 வருடங்களுக்கு உழைத்திருக்கிறோம். இந்த படத்திற்கு 8 கோடி வரை செலவாகியுள்ளது. எந்த ஒரு முன்னனி ஹிரோகள் இல்லாத இந்த படம் 8 கோடி வரை செலவு செய்தது அதிகம் தான். இந்த பணத்தை ஒரு வாரத்தில் வசூத்துவிட முடியாது. அந்த வலி பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இப்ப உங்க சைட்டில் உள்ளது. நாங்கள் பட்ட கஷடம் இந்த வீடியோவில் சொல்லிட முடியாது, சொல்லவும் கூடாது. ஒரு இயக்குனராக என் தனிப்பட்ட வேண்டுகொள் என்று தெரிவித்து இருந்தார். இது எப்படியோ தமிழ்ராக்கர்ஸ் காதில் விழுத்துவிட்டது போல. அதனால் சென்னை2சிங்கப்பூர் படம் தற்போது அவர்கள் தளத்தில் இருந்து நீக்கி விட்டனர். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here