சென்னையில மட்டும் சர்க்கார் எவ்ளோ வசூல் ஆயிருக்கு தெரியுமா?

0
2564

பல சர்ச்சைகள், வழக்குகளை கடந்து சர்க்கார் படம் நேற்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சர்க்கார் படம் தன்னுடையது என உதவி இயக்குனர் தருண் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜிடம் முறையிட, இதன் தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய, உடனே பாக்யராஜ் வழக்கு போட்டு, அதில்
வெற்றியும் பெற்று, இறுதியில் சமரசமாகி, தருணுக்கு டைட்டில் கார்டில் நன்றி சொல்லி, அவருக்கு 30 லட்சம் நஷ்ட இழப்பீடும் தந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

எல்லா பிரச்சனகளும், சர்ச்சைகளும் ஓய்ந்து எப்படியோ தீஆவளி அன்று சர்க்கார் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே திரைக்கதை வெளியே சொல்லப்பட்டு விட்டதால் எங்கே படம் வெற்றி பெறாமல் போய் விடுமோ என சர்க்கார் கூட்டணி கவலையில் இருந்தது.

ஆனால் வழக்கமாக எதிர்பார்த்ததை விட மிக அதிக வசூல் சாதனையை முதல் நாளில் சர்க்கார் ப்டம் படைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையில் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் பாகுபலி-2 மற்றும் காலா படத்தை விட மிக அதிகமாக வசூல் சாதனையை பெற்றுள்ளது சர்க்கார் படம்.

நேற்று சென்னையில் மட்டும் 22 திரையரங்குகளில் சர்க்கார் வெளியானது. நேற்று மொத்தம் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. முதல் நாளே 2 கோடியே 3 லட்சம் வசூல் ஆகி புதிய சாதனை படைத்துள்ளது. சென்னையில் இவ்வளவு வசூல் ஆன முதல் திரைப்படம் சர்க்கார் .

வெளி நாடுகளில் நேற்று சர்க்கார் திரையிடப் பட்டது. அமெரிக்காவில் வசூல் சாதனையை சர்க்கார் படைத்தது. இந்த தீபாவளி சரவெடியாக விஜய்க்கு மாறியுள்ளதால், விஜய் தரப்பும், விஜயின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here