ஜிஎஸ்டி வரியில் அதிரடி மாற்றம்.. அருண் ஜேட்லியின் மாஸ்டர் பிளான்..!

0
6126
2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலை மையமாக வைத்து மோடி தலைமையிலான பிஜேபியும் சரி, ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் சரி பல அதிரடியான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்நிலையில் பிஜேபி தனது 4.5 வருட ஆட்சியில் செய்த தவறுகளைச் சரி செய்ய வேண்டும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு முக்கியக் காரணம் அருண் ஜெட்லி அறிவித்துள்ள அறிவிப்புகள் தான்.
ஆதார் திட்டம் எப்படிக் காங்கிரஸ் கட்சி உருவாக்கியதோ அதேபோல் தான் சரக்கு மற்றும் சேவை வரியையும் உருவாக்கியது. ஆனால் இந்த இரண்டு திட்டத்தையும் பெரிய அளவில் அமலாக்கம் செய்தது பிஜேபி என்றால் மிகையாகாது. குறிப்பாகக் கிடப்பில் இருந்த ஜிஎஸ்டி திட்டத்தை ஆரம்பம் முதல் அமலாக்கம் செய்தது மோடி அரசு.
இங்குத் தான் பிரச்சனை மோடி அரசு இத்திட்டத்தை அமலாக்கம் செய்தபோது ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் வரையில் விரிவாக்கம் செய்தது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்தனர், இதை உணர்ந்த மோடி இதுநாள் வரையில் தொடர்ந்து மாற்றம் செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரி விகித பட்டியலை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் 28 சதவீத வரி அளவை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி கூறுகையில் 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் 99 சதவீத பொருட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் 28 சதவீத வரிப் பட்டியலில் இருந்து 18 சதவீத வரிப் பட்டியலில் கொண்டு வரப்பட உள்ளது, இதோடு 28 சதவீத வரி பட்டியலை நீக்கவும் மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
12 மற்றும் 18 சதவீத வரி பட்டியலை இணைக்கப்படும் நிலையில் புதிய வரி அளவீட்டை திட்டமிடம் சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது, அரவிந்த் சுப்பிரமணியம் தலைமையிலான பொருளாதார வல்லுனர் அமைப்பின் அறிக்கையின் படி 15 சதவீத வரி இந்த இணைப்பிற்குச் சரியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here