ஒருவழியாகத் தனுஷ் வந்துவிட்டார்.. செளந்தர்யா விசாகன் மகிழ்ச்சி..!

0
1399

இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின இளைய மகள் செளந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார்.

திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து சினிமா துறையில் இயக்கும், நிர்வாகம் எனப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் செளந்தர்யா. இதற்கிடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 2017-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.

இந்நிலையில் இவருக்கும், தொழிலதிபர் விசாகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் தமிழ் திரையுலகம் முழுவதும் செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினி வீட்டின் மூத்த மாப்பிள்ளை தனுஷ் திருமண நிகழ்ச்சி புகைப்படங்களில் தென்படவில்லை. இது சினிமா ஊடகங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை நடந்த திருமணத்தில் தனுஷ் வந்தார்.

வெள்ளிக்கிழமை முதல் நடந்து வரும் திருமண நிகழ்ச்சிக்கு ஒரு டீவிட்டை கூடத் தனுஷ் வாழ்த்து கூறிவில்லை.

அப்படியே தனுஷ்-இன் டிவிட்டர் பக்கத்தைக் கொஞ்சம் அலசாலம்ன்னு போனா ஸ்ரீகாந்த் நடிக்கும் மகா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ். ஆனால் செளந்தர்யாவுக்கு ஒரு வாழ்த்து போடலை.

என்னதான் இருந்தாலும் அக்காவின் கணவர், மாமா தனுஷ் வாழ்த்தி ஒரு டீவிட் போட்டிருக்க வேண்டாமா..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here