குறைந்த பந்தில் அதிரடி சதங்கள்… ஐ.பி.எல் ஹிஸ்ட்ரி!

0
16691

5. டி வில்லியர்ஸ் (ஆர்.சி.பி)

அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறார் டி வில்லியர்ஸ். 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் சதத்தை விளாசியுள்ளார்.

4.கில்கிறிஸ்ட் (டெக்கன் சார்ஜர்ஸ்)

2008-ம் ஆண்டு மும்மை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 பந்துகளில் சதத்தை எட்டியிருக்கிறார் கில்கிறிஸ்ட்.

3.டேவிட் மில்லர் (கிங்ஸ் லெவன்)

2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மில்லர் 38 பந்துகளில் சதத்தை கடந்துள்ளார்.

2. யூசப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

2010-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்துகளை பறக்க விட்ட பதான் 37 பந்துகளை சதத்தை அடித்திருக்கிறார்.

1. கிறிஸ் கெயில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) 

ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பெருமைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெயில். 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியை துவம்சம் செய்த கெயில், 30 பந்துகளில் சதத்தை தெறிக்க விட்டார். இவர் அடிப்பதைப் பார்த்தால் இவர் கெயிலா அல்லது புயலா என்று தான் வியக்க தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here