கோஹ்லி அனுஷ்கா திருமண வரவேற்பிற்கு அழைக்கப்ட்ட ஒரே ஒரு ரசிகர்!

0
815

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியிக் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் 11 தேதி திருமணம் செய்து கொண்டனர். பிறகு கடந்த 26 ஆம் தேதி முப்பையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலரும் கலந்து கொண்டர். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் வட்டாரங்களும் கலந்து கொண்டன. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு இலங்கை அணியின் ரசிகர் ‘கயான் சேனநாயகே’ அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்விற்கு வந்த ஒரே கிரிக்கெட் ரசிகர் இவர் மட்டுமே. கோஹ்லி இவருக்கு தனி மரியாதை கொடுத்தார். இவர் அங்கு இருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோஹ்லி 2007ல் அண்டர் 19 போட்டி விளையாடிக் கொண்டு இருந்ததில் இருந்தே கயான் சேனநாயகேவுடன் நண்பராக இருந்துள்ளார். அப்போதே ஒரு இலங்கைக்கு எதிரான போட்டியில் கோஹ்லியை பார்த்து இவர் பாராட்டி இருக்கிறார். அந்த நன்றியை மறக்காமல் கோஹ்லி இவரை அழைத்துள்ளார்.

கோஹ்லி அனுஷ்கா திருமண வரவேற்பிற்கு அழைக்கப்ட்ட ஒரே ஒரு ரசிகர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here