நினைத்ததை நடக்கச் செய்யும் அற்புதம் நிறைந்த ஊதியூர் சித்தர் மலை!! பௌர்ணமியன்று சென்றால் காரிய சித்தி!!

0
606

சித்தர்கள்!! அவர்களின் வாழ்க்கையும், அவர்களின் சக்தியும் இன்று வரை அறியப்படாத ரகசியங்கள், மேலும் அவர்கள் பல அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள். அத்தனை சக்த்யும் அவர்களின் ஒருமுகதவத்தினால் மட்டுமே வந்திருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த இடத்தில் சென்றாலே அங்கு நிலவும் அந்த ஆன்மாக்களின் அதிர்வுகள் உங்களை வந்தடையும் என்பதை அடித்துச் சொல்லலாம்.
அதனால்தான் அங்கு சென்று வேண்டிக் கொண்டால் பலிக்கும்.

அப்படி காங்கேயம் பகுதியில்ல் இருக்கும் மலைக்காடுகளில் தங்கி அருள் புரிந்த
சித்தர்களை காண திருவிழாப் போல் மக்கள் படையெடுக்கின்ரனர். அங்கு சென்று
அவர்களின் வேண்டுதல் நிறைவேறியது என சொல்லாதவர்கள் யாருமில்லை.

கொங்கண சித்தர் குகை :

அவ்வாறு புகழ்ப்பெற்ற சித்தர் மலைதான் ஊதியூர் கொங்கண சித்தர் குகை.
முருகனின் சீடருள் ஒருவரான கொங்கன சித்தர் வாசம் செய்த இடமாகும் , .
கொங்கண சித்தர் தவம் புரிந்த மிகச் சிறிய குகை மிகவு பிரசித்திப் பெற்றது..அங்கு
லிங்கத்தை அவர் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

உள்ளே செல்லும் வழி :

உள்ளே போவதற்கான வழி மிகச் சிறியதாக இருப்பதால், படுத்தபடி ஊர்ந்து
கொண்டேதான் உள்ளே செல்ல வேண்டும்.

ஆனால் அதில் எவ்வித சிரமுமிருக்காது. எவ்வளவு குண்டாக இருந்தாலு உள்ளே
போகும்போது எளிதில் உள்ளே சென்று விடுவார்கள். இதுதான் அந்த குகையின்
அதிசயங்களில் ஒன்று என்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

 

மூலிகை ரசம் :

அங்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசையன்று சிறப்பு பூஜைகள் நடக்கும்
மூலிகை ரசம் காய்ச்சுவார்கள். அந்த நாட்களில் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த ரசத்தை குடிப்பதல நோய்கள், கடன்கள் விலகும். வேண்டிய காரியம் நடக்கும், திருமணத்தடை விலகும் என்று அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அருகில் இருக்கும் ஆதி சித்தர் கோவில் :

குகையில் ஒரு மைல் தூரத்தில் இருப்பதுதான் அமைதியான ஆதி சித்தரின் (முருகர்
)திருக்கோயில். நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று , பழனியில் உள்ள
தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக கட்சி
அளிக்கிறார் ஆதி சித்தர் .

இந்த சிலை கொங்கன சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இதுவும்
நவபாஷான சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு .

 

குகை தோன்றிய வரலாறு :

ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று
கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது.

மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

செல்லும் வழி :

காங்கேயம் அருகில் ஊதியூரில் இந்த திருத்தலம் உள்ள்து.

பெருந்துறையிலிருந்து முக்கால் மணி தூரத்தில் செல்லலாம். தாராபுரத்திலிருந்தும் மிக அருகில் இருக்கின்றது.

ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் பாதையில் ஊதியூர் இருக்கின்றது. ஈரோடு-பழனி இரு வழிகள் இருப்பதால், பெருந்துறை வழியை தேர்ந்தெடுத்தால், இங்கோவிலுக்கு அருகாமையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here