தமிழ் நாட்டுல எந்த ஊருல எந்த உணவு பிரபலம்னு தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!

0
1274

ஆந்திராக்கு அப்புறம் நம்ம தமிழ் நாட்டுலதான் காரசாரமான உணவும் ,
திண்பண்டங்களும் கிடைக்கும். அவரவர் தொழில், நில வளம் கொண்டு செய்யப்படும்
உணவுவகைகள் பிற்கலத்தில் அந்தந்த ஊருக்கு அடையாளமாகிவிடுகிறது..

அப்படி எந்த ஊருல எந்த உணவு ஃபேமஸ்னு கொஞ்சம் பாத்துட்டு வ்ரலாமா.. வாங்க!!

திருநெல்வேலி -அல்வா :

திரு நெல்வேலின்ன கண்ண மூடிகிட்டு ஸாரு, வாயை திறந்தபடி அல்வான்னு சின்ன
குழந்தை கூட சொல்லிடும். அதுவும் இருட்டுகடை அல்வா உலக ஃபேமஸ். திரு
நெல்வேலி போயிட்டு இருட்டுகடை அல்வா வாங்காமயா வந்த ன்னு ஏதோ தெய்வ
குத்தமான மாதிரி ஊரெல்லாம் கேள்வி கேக்கும்.

கும்பகோணம் டிகிரி காஃபி :

என்ன சொல்லுங்க. காலையில் எழுந்ததும் காஃபி மணத்தோட பாலும் டிகாசனும் கலந்த நுரை ததும்ப காபியை குடிப்பதற்கு ஏதாவது ஈடு இருக்கா? காபிக்கும் நம்ம ஊர்ல பாப்புலர் இடம் இருக்குன்னா அது கும்பகோணதான். செம்பு டம்ளர்ல நுரையோட டிகிரி காபி போட்டு தருவாங்க.அங்கு தர்ற காபில அப்படி ஒரு அரோமா, அப்படி ஒரு சுவை. அதை குடிச்சா வர்ற பரம திருப்தி, அன்னைக்கு நாள் முழுக்க நிலைச்சு இருக்கும்.

ஆம்பூர் பிரியாணி :

ஆம்பூர்ன்னு சொல்லி முடிக்க கூட மாட்டாங்க ..பிரியாணின்னு கூடவே ஒரு துணிய
வார்த்தை ஏறக்குறைய தமிழ் நாட்டுல எல்லாரு சொல்லிடுவாங்க. சிக்கன், மட்டன்,
முட்டைன்னு எல்லா ரகத்திலும் சும்மா ஊரே மாசால் வசம் தூக்க பிரியாணி செய்வாங்க. வீக் எண்ட்ல் அங்க கூட்டம் தீபாவளி மாதிரி அலைமோதும்.

காஞ்சிபுரம் -இட்லி :

காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டுமல்ல, இட்லிக்கும் ஃபேமஸ் தெரியுமா? ரவுண்டா இல்லாமல் சின்ன தூண் மாதிரி வடிவத்துல, மிளகு சேர்த்து செய்யப்படற இந்த இட்லி அவ்வளவு அருமையா இருக்குமாம். எதுக்கும் நீங்களும் போய் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.

நாஞ்சில்- மீன் கறி

நாகர்கோவில் பக்கத்துல இருக்கிற நாஞ்சில் நாட்டுல மீன் கறி அவ்வளவு சுவையா
இருக்கும்ன்னு ஊரெல்லாம் சொல்றாங்க. இந்த மீன் கறியோட ஸ்பெஷலே தேங்காய்
எண்ணெயில் செய்யறதுதானாம்.

மதுரை -ஜிகர்தண்டா

நம்ம தூங்கா நகரமான மதுரையில் பேர் போன உணவு ஜிகர் தண்டா. மதுரை
ஜிகர்தண்டா மாதிரி ஒரிஜினல் மத்த இடத்துல எல்லாம் கிடைக்காதுங்க.. அங்க கடைக்கு கடை ஜிகர் தண்டா இருக்கு. அவ்வளவு பாப்புலர்.

பழனி -பஞ்சாமிர்தம்

பழனி ந்னு சொன்னாலே வாய் மணக்கும். முருகன் பேர் மட்டுமல்ல. அவனுக்கு
படைக்கிற பஞ்சாமிர்தத்தினாலேயும்தான். அத்தனை சுவையாக இருக்கும்.

கோவில்பட்டி-கடலைமிட்டாய் :

நொறுக்குத் தீனிக்கும் நம்ம ஊர்ல பிரபலமான ஊர்லம இருக்கு. அப்படிதன கோவில் பட்டி கடலைமிட்டாய்க்கு பாப்புலர். தேன், வெல்லம், கடலையோடு செய்யப்படற இந்த ஊரு கடலைட்டாய்க்கு தனிச்சுவை இருக்குன்னு அதை சாப்பிட்டா தெரிஞ்சுக்குவீங்க..

ஊட்டி வர்க்கி :

ஊட்டின்னா எல்லாருக்கும் குளிர் மட்டுமல்ல வருக்கியும் ஞாபகம் வரும். ஊட்டி வருக்கி ந்னு நிறைய கடைகளில் விக்கிறாங்க. என்ன இருந்தாலும் ஊட்டில வாங்கிற வருக்கி அத்னை சுவையும் மணமும் எப்படி வருதுன்னுதன தெரில.

சென்னை -வடகறி :

எல்லா ஊரையும் சொல்லி நம்ம மெட்ராஸை சொல்லலைன்னா எப்படி… மத்த ஊர்ல
எல்லாம் இட்லி, தோசைக்கு சட்னி சாம்பரனா. சென்னையில என்ன? வடகறிதான். . அங்க பாப்புலரா இருக்கிற மாதிரி வேறெங்கேயும் இந்த உணவு இருக்கிறதுல்ல.சூட மசாலா வடையில் செய்யற செமி (semi)  க்ரேவி யான இது இட்லிக்கு தொட்டுக்க செம
காம்பினேஷன்னு அதை சாப்பிடறவங்க சொல்றாங்க பாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here