பெங்களூருக்கு போனால் இதையெல்லாம் கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க…!

0
1891

பெங்களூரின் மையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ரோட், பெங்களூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, தமிழக இளைஞர்களுக்கும் இதுதான் ஈர்ப்பு மையம். மின்னும் விளக்குகள், கட்டமைப்பான மாடங்கள், பார்க், ஸ்பா, மால்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ், பார்ஸ், பப்ஸ் என எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே ஏரியாவில் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது இந்த இடத்தை? ஏன் இந்த ஏரியாவை நம் தமிழ் வாலிபர்களுக்கு பிடித்திருக்கிறது? என இங்கு வந்திருந்த தமிழ் பசங்க, பொண்ணுங்ககிட்ட ஜாலியா ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினோம். அவங்க தெரிவித்த சில காரனனகளை இங்கே பார்ப்போம்.

#1 ஃபாரின் லொக்கேஷன்:
எம்.ஜி. ரோட்டின் முழுப்பெயர் மகாத்மா காந்தி சாலை. பெயருக்கும் அங்கு நடப்பதற்கும் கொஞ்சம் கூட சமந்தமே இருக்காதுதான். பெங்களூரின் அழகிய கட்டமைப்பு வட்டங்களுள் இந்த பகுதியும் ஒன்று. பார்ப்பதற்கு ஒரு ஃபாரின் லொக்கேஷன் போல இருப்பதால் வாலிபர்கள் இங்கே வருகின்றனராம்.

#2 யூத்ஃபுல் ஸ்பாட்:
எம்.ஜி. ரோட் ஒரு யூத்ஃபுல் ஸ்பாட். முழுக்க முழுக்க வாலிபர்களுக்காக மட்டுமே என்று கூட சொல்லலாம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரவு என்றால் வாலிப உள்ளங்கள் இச்சாலையின் மடியில் தஞ்சம் புகுந்திருக்கும். சாலை முழுவதும் பப்ஸ் இருப்பதால் அன்றிரு நாள் அந்த இடமே ஜகஜோதியாக இருக்கும்.

#3 ஷாப்பிங்:
ஷாப்பிங் ஏன்றாலே பெங்களூருதான். வெளிநாட்டில் இருந்து இறங்கும் எல்லா காஸ்மெட்டிக்ஸ், காஸ்ட்யூம்ஸும் இங்கேதான் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கான எல்லா காஸ்மெட்டிக்ஸ் பொருட்களும் இங்கே மலை போல குவிந்துள்ளன. குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்காவது ஷாப்பிங் முடித்துவிட்டுதான் வெளியே வருவார்கள் பெண்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here