மோடிக்கும், ராகுலுக்கும் செக் வைத்த பேஸ்புக்.. புதிய சட்டம்..!

0
693

இந்தியாவில் நடக்க இருக்கும் அடுத்த மிகப்பெரிய நிகழ்வு என்றால் அது பொதுத் தேர்தல் தான். ஏன் முக்கியமான நிகழ்வு தெரியுமா..?

10 வருடம் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், 2ஜி ஊழல் மற்றும் ஒவ்வொருவரின் கணக்கில் 15 லட்சம் ரூபாய்ப் போடப்படும், கருப்புப் பணத்தை ஒழிக்கப்படும் எனப் பல்வேறு அதிரடியான சவால்களை முன்வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார் மோடி. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு நடந்தது எல்லாம் தலைகீழாக இருந்தது. இதில் காண்டாகியுள்ள மக்கள் தற்போது தேர்தலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் எதிர்நோக்கியுள்ள நிலையில், கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்கள் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கூகிள் இதற்கான பணிகளை எடுத்துள்ள நிலையில், தற்போது பேஸ்புக் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்புதிய நடவடிக்கையின் படி, அரசியல் விளம்பரங்களை யார் பதிவேற்றம் செய்தார், இந்த விளம்பரத்திற்கு யார் பணம் கொடுத்தார்கள் என அனைத்துத் தகவல்களையும் வெளியிட முடிவு செய்துள்ளது.

இதேபோல் Ad Library என்ற ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது, இதில் அரசியல் தொடர்புடைய விளம்பரம், அதற்கு வந்த Impressions, அதற்குச் செலவு செய்யப்பட்ட தொகை, எந்தப் பகுதியில் இருந்து எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என அனைத்து விதமான தகவல்களையும் இதில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் எந்தெந்த அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காகச் செலவு செய்தார்கள் எனத் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here