ஜெயலலிதா தன் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்… அண்ணன் வாசுதேவன் பகீர் தகவல்!

0
5075

ஜெயலலிதாவிற்கும் நடிகர் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது  உண்மை தான். ஹைத்திரபாத்தில் வைத்து மறைமுகமாக வளத்தார். பிறகு அவரே திருமணமும் செய்து வைத்தார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தன... அண்ணன் வாசுதேவன் பகீர் தகவல்!

அம்ருதா யார்?

அம்ருதா என்ற பெண் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் என் அம்மா கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கும் நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு குழந்தை பிறந்தது என்று அது நான்தான் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார். ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதாவும் ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது என்று ஊடங்களுக்கு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தன... அண்ணன் வாசுதேவன் பகீர் தகவல்!வாசுதேவன் பேட்டி:

தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் புதிய தகவலை கூறியுள்ளார். ஜெயராமின் மூத்த தாரத்திற்கு பிறந்தவர் வாசுதேவன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவிற்கும் சோபன் பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை தான். அந்த குழந்தையை ஹைத்ராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள் என்றும் ஜெயலலிதாதான் திருமணம் செய்து வைத்தார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தன... அண்ணன் வாசுதேவன் பகீர் தகவல்!

குழந்தைகள் எங்கே?

ஜெயலலிதாவிற்கு பிறந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் சொல்கிறார் வாசுதேவன். ஜெயலலிதாவிற்கு சென்னையில் தான் பிரசவம் பாத்தார்கள் என்று சொல்லுவது தவறான தகவல். ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்.

 ஜெயலலிதா தன் வாழ்க்கையில் செய்த 7 மாபெரும் பிழைகள்!

சசிகலாவுக்கு தெரியும்

ஜெயலலிதாவின் குழந்தை யார் என்று சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் நன்றாக தெரியும் என்றார். இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் வாசுதேவன் கூறினார். தம்பி மகள் தீபா தற்போது என்னுடன் பேசுவதில்லை என்று தெரிவித்திருந்தார். மர்மமாக இருக்கும் ஜெயலலிதாவின் குழந்தை பிரச்சனை வெளிச்சத்திற்கு வருமா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here