ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றி ரகசியமான 5 விஷயங்கள்!

0
273

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முக்கிய இடம் உண்டு. வைணவத்தை வாழ வைத்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த ஊர் இது. இந்த ஊரைப் பற்றி இது வரை நீங்கள் அறியாத 5 தகவல்களை இங்கே பார்போம்.

#1 பல நூற்றாண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக திகழ்ந்த இந்த ஊரை ஆண்ட அரசி ராணி மல்லி. இந்த ராணிக்கு ராணி வில்லி மற்றும் கண்டன் என இரு மகள்கள் இருந்துள்ளனர். காட்டில் வேட்டையாடியபோது கண்டன் புலியால் கொல்லப்பட்டார்.

#2 மகளது இறப்பிற்கு பிறகு, ஆட்சியை தொடர்ந்த ராணி மல்லி வனப்பகுதியை அழித்து அழகிய நகர்ப்புறம் ஒன்றை கட்டமைத்தார். இந்த புத்தம்புதிய நகரை ராணி வில்லி ஆண்ட காரணத்தால் வில்லிபுதூர் என பெயரிடப்பட்டது.

#3 பின் வைணவ சமயம் பரப்பப்பட்டபோது, திருமகளின் அம்சமான ஆண்டாள் பிறந்தார். இதனால் திருவில்லிபுத்தூர் என பெயர் மாற்றப்பட்டது.

#4 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் திருவில்லிப்புத்தூரில் பல கோயில்களை கட்டியெழுப்பினர். மிக உயர்ந்த கோபுரத்தினை உடைய கோயிலில் ஆண்டாள் சென்று அமர்ந்துகொண்டார்.

#5 திருவில்லிப்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு வைணவ சமயக் கோயில்களும், சமணர் படுகைகளும், சின்னகளும் அமைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here