கும்பமேளாவில் அதிர்ச்சி.. இன்ஜினியர்களும், மேலாண்மை பட்டதாரிகளும் நாகச் சாதுவாக மாறினர்..!

0
204

வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவான கும்பமேளாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் 10,000க்கும் அதிகமானோர் நாகச் சாதுவாக மாறியுள்ளனர். இதில் என்ன வினோதம் என்றால் இந்த வருடம் அதிகமான இன்ஜினியர்களும், மேலாண்மை பட்டதாரிகள் சாதுவாக மாறியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் நடந்து வரும் இந்தக் கும்பமேளா நிகழ்ச்சியைக் காண கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பல ஆயிரம் பேர் பின்டமிட்டு விழிப்பாடு நடத்தினர், இதில் பலர் இன்ஜினியர்களும், மேலாண்மை பட்டதாரிகளும் ஆவர். நாகச் சாதுக்கள் என்பவர்கள் பொதுவாழ்க்கையை விடுத்து இறைவனுக்காகத் தன் வாழ்க்கை அற்பணிப்புச் செய்து வாழ்பவர்கள்.

பொதுவாக இவர்கள் மலைப்பகுதியில் மனிதர்களை விட்டுத் தனியாக வாழ்பவர்கள், கும்பமேளா போன்ற முக்கியமான விழாவின் போது தான் சாதுக்கள் ஒன்றாகக் கூடி பல்வேறு விதமான வழிப்பாடுகளைச் செய்வார்கள். இவர்கள் செய்யும் பல வழிப்பாடுகள் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுப்போல் சாதுவாக மாறுபவர்கள் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் மனிதர்களின் மீது நம்பிக்கையில்லாமல் இந்தத் துறவு வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டுச் சாதுவாக மாறியவர்கள் இன்ஜினியர்களும், மேலாண்மை பட்டதாரிகள் என்பதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுமார் 14 அமைப்புகளின் தலைமைப்பான அகிலப் பாரதிய ஆக்ரா பிரிஷத் அமைப்புக் கூறுகையில் இந்த ஆண்டுக் கும்பமேளா நிகழ்ச்சியில் சுமார் 10000 பேர் நாகச் சாதுவாக மாறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here