கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடக் கூடாதா? உண்மை என்ன?

0
15524

கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடக்கூடாது. அது உடலில் சூட்டை அதிகரிக்கும். ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூடாது அது சளி பிடிக்கச் செய்யும் என ஏகத்துக்கும் நம்மிடம் கதை சுற்றி வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படியெல்லாம் கிடையாது. இங்கே கோடைக்காலத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிற கட்டுக்கதைகளையும், உண்மைகள் என்னவென்றும் தான் பார்க்கப் போகிறோம்.

கட்டுக்கதை: பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.
உண்மை: பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.

கட்டுக்கதை: மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.
உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்.

கட்டுக்கதை: குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.
உண்மை: சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.

கட்டுக்கதை: கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
உண்மை: தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here