கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற முருங்கைப்பூ முட்டை பொரியல்!!

0
97

முருங்கைக் கீரை, காய், பூ எல்லாமே சுவைமிக்கத்து. அவை சுவை மட்டுமல்ல சத்துக்கள் நிறைந்தவை. இரும்புச்சத்து, கால்சியம். பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்தவை. அது போல் முட்டை. அதிக புரதம், நல்ல கொழுப்பு, விட்டமின் ஏ, மினரல் போன்றவை கொண்டவை.

இவையனைத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியம் தேவை.வாந்தி மயக்கங்களுடன் பொழுதை கடக்கும் கர்ப்பிணிகள் சோர்ந்து போவார்கள், அவர்களுக்கு போதிய ஊட்டமும் கிடைக்காது. இதனால் குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கும். அப்படி அவஸ்தை படுபவர்களுக்கு இந்த ரெசிபி பிடித்து போகும்.

இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்லாது முக்கியமாக குழந்தைகள் சாப்பிடுவதால்
அவர்களுக்கு எலும்பு பலம் உண்டாகும். காய்ச்சல் ஜலதோஷத்திற்கும் ஏற்றது. அதனை எப்படி சாப்பிடலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

முருங்கைப்பூ – 2 கைப்பிடி அளவு
முட்டை – ஒன்று
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 2
சீரகம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

ஸ்டெப்-1 :

முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வையுங்கள். வெங்காயம்
மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப்-2 :

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளுத்து, பூண்டு, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய கறிவேப்பிலைச் சேர்த்து வதக்குங்கள்.

ஸ்டெப்-3 :

பின்முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்க வேண்டும் அத்துடன் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை முட்டையை உடைத்து ஊற்றவும்.நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்ததும் இறக்கி வையுங்கள்.சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.


.
குறிப்பு :

மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here