வறுமை நீங்கி செல்வம் பெருக இதையெல்லாம் வீட்ல இருந்து அப்புறப்படுத்துங்க!!

0
64

நம் மன ஓட்டங்களுக்கு தகுந்தாற்போல்தான் உங்களைச் சுற்றி அதிர்வலைகள் ஏற்படுத்தி அவை செயலாக மாற்றி அது நடக்கும்.

ஆழ்மனதில் நீங்கள் ஒரு விஷயத்தை திடமாக நம்பினால் அது அப்படியே நடக்கும். அப்படி சில விஷயங்கள் உங்களுக்கு நேர்மறை அல்லது எதிர்மறை விளைவுகளைச் சுற்றி உருவாக்கும்போது அதன்படியே நிகழ்வுகளும் நடக்கும். அதனால்தான் கஷ்டங்கள், அல்லது சந்தோஷங்கள் உருவாகிறது.

அப்படி உங்களைச் சுற்றி எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் விஷயங்கள் என்னவென்று பார்த்து அப்புறப்படுத்த சவுத் நியூஸ் உங்களுக்கு உதவுகிறது. வாருங்கள் பாக்கலாம்.

தேன்கூடு :

வீட்டில் தேன்கூடு இருந்தால் அது துரதிஷ்டத்தை குறிக்கும். வீட்டில் கஷ்டங்கள் உருவாகும். ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகிக் கொண்டேயிருக்கும்.

புறாக்கூடு :

வீட்டில் புறாக்கூடு இருந்தால் பணம் தங்காது. வறுமை உண்டாகும். ஆகவே புறாகூடு இருந்தால் வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.

உடைந்த கண்ணாடி :

உடைந்த கண்ணாடி எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆகவே கஷ்டங்கள் ஒன்றன்பின்ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும். ஆகவே லேசாக உடைந்திருந்தாலும் கூட அகண்ணாடியை அப்புறப்படுத்துங்கள்.

சிலந்தி வலை :

சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால் அது துர்திஷ்டத்தின் அடையாளமாகும். அங்கு எதிர்மறை நிகழ்வுகள் நடக்காமலிருக்க சிலந்தி வலைகளை நீக்குங்கள்.

வீட்டின் சுவரில் விரிசல் :

வீட்டின் சுவரில் விரிசல் இருந்தால் செல்வம் தங்காது. வசதி வாய்ப்புகளுக்கு இடையூறு தருவிக்கும். அப்படி விரிசல் இருந்தால் அதனை உடனே சரிப்படுத்துங்கள்.

 

மொட்டை மாடி :

வேண்டாத பொருட்களை சிலர் மொட்டை மாடியில் போட்டு வைப்பதுண்டு. அப்படி இருந்தால் அவற்றை முதலில் அப்புறப்படுத்துங்கள். வாஸ்துப்படி குப்பை வேண்டாத பொருட்கள் கொண்ட மொட்டை மாடி எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். பணம் தங்காது. செலவுகள் அதிகரிக்கும்.

ஒழுகும் குழாய் :

வீட்டில் தண்ணீர் குழாய்கள் ஒழுகிக் கொண்டிருந்தால், லட்சுமி அந்த வீட்டில் தங்க மாட்டாள். நீர் நேர்மறை ஆற்றல் தருவதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அத்தகைய நீரை வீணாக்கிக் கொண்டிருந்தால் பாவங்களும், எதிர்மறை அதிர்வுகளையும் உண்டாக்கும்.

வாடிய செடி

வீட்டில் வளரும் செடிகளுக்கும் உயிர் உண்டு. அதிர்வுகள் உண்டு. வீட்டில் வாடிய செடிகளை வைத்திருக்கக் கூடாது. இவை எதிர்ம்றை அதிர்வுகளை ஏற்படுத்தும். அதோடு, செல்வமும் தங்காமல் அடிக்கடி உடல் நோய்வாய்ப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here