இந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்!

0
866

வாழ்வில் எல்லாருக்கும் ஏற்றம், இறக்கங்கள் இருக்கும். சிலருக்கு எப்போதும் பிரச்சனைகள், எல்லாவற்ற்லும் இறங்கு முகம், சிலருக்கு சனியின் ஆதிக்கத்தால் எப்போதும் பிரச்சனைகள் வந்தபடி இருக்கும்.

சின்ன சின்ன பரிகாரகளால் உங்கள் பாதிப்புகள் நீங்கச் செய்யலம. அப்படி ஒன்றுதான் இந்த பரிகாரம்.

பச்சரிசி ஏன்?

பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பச்சரிசியில் உணவு செய்வது சிரத்தை. புழுங்கல் அரிசியை விட பச்சரிசியே பூஜைகளுக்கு உசிதமாக இந்து சாஸ்திரத்தில் கருதப்படுகிறது.

அந்த பச்சரிசி எறும்புகளுக்கு மிக்வும் விருப்பமான உணவு. மற்றும் எறும்புகளுக்கு அதனை உணவிடுவதால் செய்த பாவம் எல்லாம் போகும். சனி பகவனைன் அருள் பார்வை கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பச்சரிசியை எப்படி பயன்படுத்தினால் உங்கள் பாவம் விலகும் என்று பார்க்கலாம்.

வணங்கும் முறை :

சனிக் கிழமையன்று குளித்து விட்டு, கையில் பச்சரிசியை ஒரு கைப்பிடி அள்ளிக் கொண்டு சூரிய பகவானை வணங்கி விட்டு, அதன் பின் மரத்தடி பிள்ளையார் உள்ள கோவிலுக்கு சென்று, பிள்ளையாரை மூன்று முறை வலம் வந்து, அதன் பின் பிள்ளையார் சிலையைச் சுற்றிலும் கையில் வைத்திருக்கும் பச்சரிசியை தூவி விட வேண்டும்.

இந்த அரிசிகளை எறும்பு சாப்பிட்டு விட்டால், உங்கள் பாவங்கள் அனைத்தும் விலகும். எறும்புகளுக்கு உணவு இடுவது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் உணவிடுவது போன்று. பல நன்மைகள் உங்கள் வாழ்வில் கிடைக்கும்.
சனியி ஆதிக்கம் குறையும் உங்களுக்கு அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, கண்டச் சனி இருந்தால், அதன் பாதிப்புகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here