எப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா? இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க!!

0
2258

எல்லாருக்குமே சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டு. அவை வருவதும் கடந்து போவதுமாக இருந்தால் பரவாயில்லை. எவற்றையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் இருக்கும். ஆனால் ஒன்று போனால் இன்னொன்று என எப்பவும் ஏதாவது பிரச்சனையோடு மாட்டிக் கோண்டு முழிப்பவர்கள் ஏராளம்.

நமக்கு மட்டும் ஏன் விட்யவே மாட்டேங்குது என ஒரு மனச் சோர்வும் கூடவே வந்து விடுகிறது. கல்யாணம் தள்ளிப் போதல், புத்திர பாக்கியம் இலாம போவது, கடன்கள் கழுத்திய நெரிப்பது, வரவு எட்டணா செலவு பத்தணா என பல செலவுகள் கையை கடிப்பது, வேலை இல்லாமல் இருப்பது, வந்த வேலிய போவது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.

இவற்றை நம்மால் தைரியமக எதிர்க்கொள்ள முடியும் என்று நினைப்பவர்கள் கூடவே இறை நம்பிகிய இருந்தால் சில பரிகாரங்களையும் செய்தல நேர்மறை பலன்கள் கிடைக்கும். கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.

கஷ்டங்கள் நீங்க

சிவன்‬ கோவில்களில் காணப்படும் வன்னி மரம் மற்றும் வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூறினால் ,நல்ல பலன் கிடைக்கும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளது. நிறைய பேருக்கு பலனளித்திருக்கிறது

வேலையின்மைக்கு :

‎செவ்வாய்க்கு‬ அதிபதியான முருகனுக்கு செவ்வாய்க் கிழமை தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த வேலை மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

 

புத்திர பாக்கியம் கிடைக்க :

புத்திர‬ பாக்கியம் இல்லாதவர்கள் 6 தேய்பிறை அஷ்டமிகளி காலத்தில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்

சர்ப்ப தோஷத்தீற்கு :

பெருமாள்‬ கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

சுந்தர காண்டம் :

 

எத்தகைய‬ கிரக தோஷத்தினால் பாதித்திருந்தாலும் சரி, தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்து வந்தால், தோஷங்களின் பாதிப்புகள் குறைந்து, நன்மைகள் வர ஆரம்பிக்கும். வீட்டில் வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்…

தரித்திரம் நீங்க :

.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன் , முடியாது என்ற எதிர்மறை சொல்லை பயன்படுத்தாதீர்கள். அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அந்த சமயத்தை குபேர காலம் என்பதல எதிர்மறை சொற்கள் லஷ்மிகடாக்த்திய வலுவிழக்கச் செய்யும்.

நெல்லிக்காய் மரம் :

வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்று சொல்வார்கள். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிக்காய் மரமாக இருப்பதால், அங்கு மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். . லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும்இருக்கிறது. நெல்லிக்காய் மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் தீண்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here