பாதவெடிப்பு மறைந்து பட்டு போல் பாதங்கள் மாறனுமா? இப்படி தேன் க்ரீமை பூசுங்க!!

0
149

பாத வெடிப்பு நிரந்தரமாக சரியாகாது. திரும்ப திரும்ப வந்துவிடும்.என்னதான் மாடர்னாக இருந்தாலும் கூட காலில் வெடிப்பு இருந்தால் முகம் சுளிக்க ஐத்துவிடும் இந்த பாத வெடிப்பு.என்ன செய்தாலும் மீண்டும் வருகிறதே என கவலையாக இருக்கிறதா?நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன். இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

தேன் க்ரீம் :

தேன் – 1 கப்
பால் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம் தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதப்பபப்டுத்திக் கொள்ளுங்கள். பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள்.அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

பயித்தம் மாவு மாஸ்க் :

எலுமிச்சை சாறு
பாசிப் பயிறு மாவு
வேப்பிலை மஞ்சள்

பயன்படுத்தும் முறை :

வேப்பிலையை அரைத்து அதனுன் பொடி செய்த பாசிப்பயிறு பொடி, கஸ்தூரி மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி , வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

கால் பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழுத்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையை அகற்றி மென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்துவிடும். நகங்களும் தூய்மையடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here