எல்லா மதத்தினருக்கும் கொண்டாடும் தீபாவளி திருநாள்!

0
526

இதோ தீபாவளி நெருங்கி விட்டது மக்கள் ஆனந்தமாகக் கொண்டாட தயாராகி விட்டார்கள். வாண்டுகள் மனதில் சந்தோஷ பட்டாம்ப்பூச்சி படபடக்கிறது. பிரிந்து கிடக்கும் உறவுகள் எல்லாம் ஒன்று கூடி மகிழும் ஓர் தீபத் திருநாள் அல்லவா தீபாவளி. உறவுகளுக்கு பாலம் போடும் திருவிழா நாள் அல்லவா, அதன் வரலாற்றை, பாரம்பரியத்தை, கலாச்சார முன்னெடுப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோமே!

தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை; தீபங்களை வரிசையாக ஏற்றி இருளை நீக்கி, புத்தாடை அணிந்து, வெடி வெடித்துக் கொண்டாடுவது நமது மரபு.

திருமாலின் கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனை வதைத்து, நீதியை நிலை நாட்டிய இந்த நாளை, அவன் விருப்பப் படியே கொண்டாடும் பண்டிகையானது.

இராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய போது மக்கள் விளக்கேற்றி கொண்டாடிய திருநாள் இது.

ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். அதை ஜோதி வடிவமாக வழிபட்டதை தீபாவளி என்றும் ஒரு வரலாறு உள்ளது.

எப்படியோ மக்கள் கொண்டாட ஒரு திருநாள். இந்துக்கள் மட்டுமா? சமணர், சீக்கியர்,அனைவருக்குமானது தீபாவளி.

சீக்கியர்கள் பொற்கோவில் கட்டுமான பணிகள் துவங்கியதையே தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இந்தியா மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் இப்பண்டிகையை வேறு வேறு காரணங்களை வைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தீபாவளியன்று காலையில் எழுந்து நீராட வேண்டும். அதை புனித நீராடல் என ஏன் சொல்கிறோம் தெரியுமா? தண்ணிரில் கங்கையும்; எண்ணெய்யில் லட்சுமியும்; அரப்பில் சரஸ்வதியும்; குங்குமத்தில் கௌரியும்; சந்தனத்தில் பூமாதேவியும்; புத்தாடையில் மகாவிஷ்ணுவும்; வசிப்பதால் எண்ணெய் தேய்த்து, அரப்பு பூசி, நீர் நிலைகளில் நீராடி, குங்குமம் சந்தனம் இட்டு, புத்தாடை பூண்டு, தீபம் ஏற்றி, வெடி வெடித்து, இனிப்புடன் இனிமையாகக் கொண்டாடவேண்டும். இறையருள் பெற வேண்டும். ஐப்பசி ஒன்றில் அனைவருக்குமான தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here