எங்கே போச்சு அந்த தீபாவளி !!

0
2368

காலம் மாற மாற எல்லம மாற வேண்டும் என்பது நியதி! அதற்காக சில நல்ல
விஷயங்களை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?
இந்தியா பெயர் போனதே நம்முடைய உறவுகளை பிணைக்கும்
பண்டிகைகள்தான். அத்தனை உறவுகளும் ஒன்று கூடியே அந்த காலத்தில்
பண்டிகைகளை கொண்டாடுவரகள்.

அதி முக்கியமாக தீபாவளி ஊர் உறவுகள் எல்லாம் வீட்டிற்கு வந்துவிடும்.
அதுவும் வீட்டின் பெரியவரான தாத்தா பாட்டி வீட்டில்தான் அனைவரும்
சேர்ந்து கொண்டாடுவார்கள்.

தீபாவளி வருவதற்கு ஒரு வாரம் முன் கூட்டியே பட்சணங்கள் செய்ய
ஆரம்பித்து விடுவார்கள். . முறுக்கு, அதிரசம, லட்டு, சீடை போன்ற்றவற்றை
செய்து விடுவோம். தீபாவளிக்கு முதல் நாள் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர
ஆரம்பிப்பார்கள். முந்தைய நாளே தீபாவளி ஆரம்பிப்பதன் அறிகுறியாக
பட்டாசு வெடிக்க வீட்டுச் சிறுவர்கள் ஆரம்பித்து விடுவார்கள்.

தீபாவளி அன்று மூன்று மணிக்கே அனைவரும் எழுந்து அடுப்பு மூட்டி
ஒவ்வொருவருக்காய் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து நான்கு மணிக்குள்
வீட்டின் பெரியவர் அனைவருக்கும் உடுப்பு எடுத்து கொடுத்து அணியச்
சொல்லி, அனைவரும் விடிவதற்குள் த்யாராகி முதல் பட்டாசை வெடிக்க
ஆர்ம்பித்து விடுவார்கள்.

அதன் பின் திகட்ட திகட்ட அக்கம் பக்கம் தரும் ப்ட்சணங்கள், வீட்டில்
செய்யப்படும் விருந்து உணவுகள் உண்டு, வீட்டின் கூடத்தில் அனைவரும் பேசி
மகிழ்வரகள். மீண்டும் மாலையில் ஆரம்பிக்கும் பட்டாசு ராஜ்ஜியம்

சரவெடி, லஷ்மி வெடி, வானைப் பிளக்கும் வான வேடிக்கைகள்,
குழதைகளுக்கென பாம்பு பட்டாசு, கம்பி மத்தாப்புகள், கண் விரிய பார்க்கப்படும்
புஸ்வானம் என இரவு முழுவதும் ஜோராக தீபாவளி முடியும். அன்றிரவு
தீபாவளி லேகியம் சாப்பிட்டு விடிந்த பின் முந்தைய நாளின் தீபாவளி
பேஷ்களை நினைத்து சிலாகித்து அவரவர் அவரவர் ஊருக்கு கிளம்புவார்கள்.

இப்படி இருந்த தீபாவளி தொலைக்காட்சி வந்த பின் மெல்ல் உறவினர்
வீட்டுக்கு செல்வது குறையத் தொடங்கியது. எல்லா தொலைக்காட்சிகளும்
தீபாவளிக்கு போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது.
நாம் காலையில் ஏதோ சடங்குக்காக குளிக்க வேண்டும் என்பது போல்
குளித்து விட்டு டிஃபன் சாப்பிட்டு டிவி முன் குடும்பமாக அமர்ந்து உறவுகளை
தொலைத்ததைப் பற்றி நடக்கும் பட்டி மன்றம் முதல் மாலை போடும் புது
ஹீரோவின் படம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தீபாவளி இனிதே
முடிந்தது என்று ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட்டு முடித்துக் கொள்கிறோம். இந்த
கால தீபாவளியை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here