லீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி!

0
295

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் லீனா மணி மேகலை தனது பழைய ஃபேஸ் புக் பதிவை தூசு தட்டி மீ டூ வில் சேர்த்துள்ளார். சில வருடங்களுக்கு முன் நடிகை பாவனாவிற்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவம் போல் தனக்கு நேர்ந்தது.

தன் தொலைக்காட்சியில் தொகுப்பாளாரக பணி புரிந்த போது ஒரு இயக்குனரை பேட்டி கண்ட பின் அவருடைய காரில் தன்னை ட்ராப் செய்வதாகச்ச் சொல்லி, காருக்குள் சென்ட்ரல் லாக் செய்து தன்னை பலவந்தப் படுத்த முய்ற்சித்தார் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால் அப்போது அந்த இயக்குனர் யாரென்று சொல்லவில்லை.

இப்போது மீ டூ இயக்கம் வலுவாக செயல்படுத்த ஆரம்பித்தவுடன் அந்த பதிவை மறுபதிவு இட்டு, அந்த இயக்குனர், சுசி கணேசன் என்று குறிப்பிட்டார். இந்த விஷயம் மெல்ல ஊடகங்களுக்கு பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் கோபப்பட்டு பிர்ஸ் மீட் வைத்து காராசாரமாக எதிர்வினை ஆற்றினார். இந்த செய்தி முழுக்க பொய் என்றும் இதனால் லீனா மணிமேகலை மீது கிரிமினல் வழக்கு போடுவதாக சொல்லி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இருவரில் எவர் சொல்வது உண்மை என்றே தெரியவில்லை. சுசி கணேசன் இந்த விஷயம் முழுக்க லீனாவின் கற்பனைகளால் உருவாகப்பட்ட கதை .
லீனா தன்னிடம் உதவி இயக்குனர் அல்லது பாடல் ஆசிரியர் ஆக உதவி செய்யுங்கள் என்று கேட்டதற்கு இரண்டும் தன்னால் செய்ய முடியவில்லை. ஆகவேதான் தன்னை பழி வாங்க முனைகிறார், இந்த செய்தியால், எங்கள் குடும்பத்தார் இரு தினங்களால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், லீனா தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இப்படி அபாண்டமாக பொய் சொல்கிறார், இவர் சொல்வது பொய் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என சுசி கணேசன் பத்திரிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறார்.

மேலும் அப்படி நடந்தது உண்மையென்றால் ,அந்த நாளிற்குப் பிறகு அவர் தன்னுடைய புத்தக் விழாவிற்கு அந்த பெண் தொகுத்து வழங்கியது எப்படி சாத்தியம் என்று கேள்வியும் விடுத்திருக்கிறார்.

லீனா மணி மேகலையோ, இவர்தான் பொய் சொல்கிறார். புத்தக விழாவிற்கு தொகுத்த சம்பவம், இந்த பாலியல் தொல்லை நிகழ்விற்கு முன்னமே நடந்தது. மேலும் நான் எப்போதும் இவரிடம் உதவிகள் கேட்டதில்லை, அதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு என்று கூறியிருக்கிறார். இருவரில் எவர் சொல்வது உண்மை எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here