உலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி படமாகிறது!

0
227
உலத்தையே பேச வைத்த ஜல்லிக்கட்டுக்கான மெரினா புரட்சி படமாக்கப்படுகிறது.

தமிழ்ர்களின் வீர வளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அவனியாபுரத்தில் கடந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என பெருமளவில் போரட்டம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் சில ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். பிறகு பேஸ்புக் வாட்ஸ்ஆப் மூலம் லட்சகணக்கில் மக்கள் திரண்டனர். அரசியல்வாதிகள் இல்லாமல் ஜல்லிகட்டு போரட்டத்தில் பங்கேற்ற இந்த மாபெரும் புரட்சி போரட்டம் இந்த முழுவதும் பேச வைத்தது மட்டுமில்லாமல் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் போரட ஆரம்பித்தனர். உலக நாடுகள் முழுவதும் தமிழ்களின் இந்த புரட்சி போராட்டதை பெருமையுடன் பேசியது. போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிகட்டு நடந்தது. இந்த மெரினா புரட்சி என்னும் வரலாற்று சம்பவம் ஒரு புது அடையாளத்தை கொடுத்தது. இந்த போராட்டம் மெரினா புரட்சி என்று இயக்குனர் பாண்டியராஜன் திரைப்படமாக தயாரிக்கிறார். விரைவில் டிரைலர் வெளியிடுவதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here