பிற்காலத்தில் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 6 டயட்:

0
961

மூட்டு தேய்மானம், மற்றும் எலும்பு தேய்மானம் இன்றைய நாட்களில் அதிகமாக மக்கள தாக்குகிறது. சற்று முந்தைய 20 ஆண்டுகளில் 50 வயதினரை தாக்கிய இந்த தேய்மானம் இப்போது 20 வயதுகளில் தாக்கியதுதான் அதிர்ச்சியான ரிப்போர்ட்.

இன்று சராசிரியாக 30 வயதுகளில் கால் வலி, மூட்டு வலி சகஜமாகி வருவது ஆபத்தானது.குறிப்பாக பெண்களுக்கு 50 வயதிற்கு மேல் இடுப்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். நகர முடியாமல் அமர முடியாமல், எழ முடியாமல் , எப்போதும் பெல்ட் போட்டபடி, திணருவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

இப்படி மூட்டு, இடுப்பு எலும்பு தேயானம் அடைந்தவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவர்களைப் போல் நமக்கும் ஆகக் கூடாது என்று நினைத்திருக்கிறீர்களா? இன்னும் வயதாக நாட்கள் இருக்கிறதே என்ற மேம்போக்குத் தனத்தால் அலட்சியப்படுத்துவதால்தான் பிற் காலத்தில் துன்பத்திற்கு ஆளாகிறோம்.

சரி இதற்கு முக்கிய காரணம் என்ன ?

மிக முக்கிய காரணம் சூரிய வெளிச்சம்.எல்லாருடைய குடியிருப்பும் அபார்ட்மென்ட் என்ற எங்கு திரும்பினாலும் கட்டிடங்களுக்குள்ளே வளரும் பருவம் வரை முடிந்துவிடுகிறது.

வெயிலில் விளையாடுவது அபூர்வமாக போய் விட்டது. சூரிய ஒளியிலிருது பெறப்படும் சிறப்பு வாய்ந்த விட்டமின் டி அதிக்ம பெற்றால் உங்கள் உடலில் அதிகம் கால்சியம் உட் கிரகித்தலும் நடக்கும். இதனால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். ஆகவே வெறும் கால்சியம் நிறைந்த உணவுகள் மட்டு பத்தாது, இலவசமாய் கிடைக்கும் அதிகாலைச் சூரியனிடம் சில நிமிடங்களாவது பேசுங்கள்.

பிற்காலத்தில் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும் 6 உணவுகள்!

 

உப்பு :

வழக்க்த்திற்கு மாறாக , நீங்கள் சேர்க்கும் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது முக்கியம், இன்றைய நவீன உலகத்தில் நம்மை அறியாமலேயே உப்பை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இது பல நோய்களுக்கு விதை. ஆகவே உப்பு குறைவான உணவுகளை சாப்பிட ஆரம்பியுங்கள்.

நட்ஸ் :

நிறைய நட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். வேர்க் கடலை, நிலக் கடலை, முந்திரி, பாதாம் போன்றவை உங்கள் கால்சியம் சத்தை அதிகப்படுத்துகின்றது.

குளிர்பானங்கள் :

2006 ஆம் நடந்த ஒரு ஆய்வில் குளிர் பானங்கள் உங்கள் எலும்புகளை பலவீனப் படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே குளிர் பானங்களை எப்போதாவது குடியுங்கள்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட குழந்தைகளுக்கும் , உங்களுக்கும் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். சீஸ், பனீர், மோர், தயிர் என அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதனால் பின்னடி எலும்பு சம்பந்த நோய்கள் வராமல் தடுக்கப் படும்.

மீன் :

மீன் குறிப்பாக சால்மன் மீன் அடிக விட்டமின் டி கொண்டது. சூரிய வெளிச்சத்தை போதிய அளவு பெற முடியாதவர்கள் மீன் தினமும் சாப்பிடுவதை வழப்படுத்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here