ரஜினி அரசியல், வைர மலை, பருவமழை… பஞ்சாங்க கணிப்புகள் எல்லாம் பலிக்கின்றன!

0
25373

ஆந்திராவில் தற்போது வைர மலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைப் போலவே தமிழகத்திலும் மாபெரும் புதையல் உள்ளதாக பஞ்சாங்க கணிப்புகள் கூறுகின்றன.

பஞ்சாங்க கணிப்புகள் என்றுமே பொய்யானது இல்லை. மழை வெள்ளம், இயற்கை சீற்றம் என பஞ்சாங்கம் கூறியவை அனைத்துமே தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து வருகின்றன. இந்தாண்டில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், முக்கிய மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்றும் பஞ்சாங்க குறிப்புகள் கூறுகின்றன.

அமோக ஆண்டு:
குறிப்பாக 2018ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழைப்பொழிவு இருக்கும். மா, பலா, தென்னை மற்றும் அனைத்து காய்கறிகளும் அமோகமாக விளையும். பயிர் விளைச்சல் செழிப்பாக இருக்கும் என பஞ்சாங்கம் கூறியுள்ளது.

பஞ்சம் இல்லை:
ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை கிடைக்கும். ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் எனவும் பஞ்சாங்கம் கூறுகிறது. ஆறுகளில் வெள்ளம் ஏற்படும், அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஜினிக்கு பீட்டா அமைப்பில் இருந்து கடிதம்!ரஜினி அரசியல்:
திரைத்துறையில் உச்ச நடிகர் ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அவரால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதைப்போலவே இப்போது ரஜினிகாந்த் அரசியலில் இறங்கியிருக்கிறார்.

புதையல் கிடைக்கும்:
ஜூலை மாதம் பூமிக்காரகன் செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் பூமியில் பலகோடி மதிப்பிலான புதையல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. பஞ்சாங்கக் கணிப்பின் படி இப்போது ஆந்திராவில் வைர மலை புதையல் கிடைத்திருக்கிறது. தமிழகத்திலும் இது போன்ற மாபெரும் புதையல் கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஜாக்பாட் அடிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பலாத்காரத்தை தடுக்க உ.பி. பெண் தயாரித்துள்ள ‘ரேப்-ப்ரூஃப்’ உள்ளாடை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here