2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..!

1
993

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஹீரோவான தோனி இல்லாமல் 2019 உலகக் கோப்பை நினைத்துப் பார்க்க முடியுமா, நிச்சயம் முடியாது. ஆனால் தோனி உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்க 5 முக்கியக் காரணங்கள் தெரிகிறது.

முதல் காரணம்

2011 உலகக்கோப்பை முடிந்து இந்திய அணியில் சச்சின், ஷேவாக், கம்பீர் என உலகக் கோப்பையில் விளையாடிய அத்தனை சீனியர்களும் அந்த அணியில் இருந்தனர். இந்நிலையில் 2015 ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையைக் காரணம் காட்டி, அதற்கு ஏற்றாற்போல் அணியைத் தயார் செய்ய விரும்புகிறோம் என்றார் தோனி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தச் சீரிஸில் சச்சின், ஷேவாக், கம்பீர் என மூன்று சீனியர் பேட்ஸ்மேன்களுமே ஒரே மேட்சில் விளையாட மாட்டார்கள். பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து ஒரு போட்டியில் சச்சின், ஒரு போட்டியில் ஷேவாக் என மாற்றப்பட்டார்கள் எனத் தோனி கூறினார்.

அதேபோலத்தான் தோனிக்கு 2019 உலகக்கோப்பை முன் வந்து நிற்கிறது. 2019 உலகக்கோப்பைக்குத் தகுதியான முழுமையான அணி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தால், இதே முறையில் கோலி எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

2வது காரணம்

கடந்த ஓரு ஆண்டாகவே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்பின்னர்களைச் சிறப்பாகச் சமாளிக்கக்கூடிய அவர், இங்கிலாந்தில் மொயின் அலி, ரஷித்தின் பந்துகளை எதிர்கொண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. இதுவும் தோனியின் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் குறைக்கும் எனத் தெரிகிறது.

3வது காரணம்

இந்தியாவின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் எந்தச் சர்ச்சையும் இல்லை. ஐந்து, ஆறாவது இடங்கள்தாம் இன்னும் செட் ஆகாமல் இருக்கின்றன. தோனிக்கான சரியான ரீப்ளேஸ்மென்ட்டாகத் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஃபிட்டாக இருக்கிறார்.

இங்கிலாந்து கண்டிஷனில் விளையாட சரியான பேட்ஸ்மேன் ஆகவும் உள்ளார். ரொட்டேஷன் பாலிசி மூலம் இனி அடுத்துவரும் ஒருநாள் போட்டிகளில் தோனியையும், தினேஷ் கார்த்திக்கையும் மாற்றி மாற்றிக் கோலி பயன்படுத்தலாம்.

4வது காரணம்

ரிஷப் பன்ட், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மூன்றுபேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டிய பொறுப்பு தோனிக்கு இருக்கிறது.

ரிஷப் பன்ட் அல்லது கே.எல் ராகுலுக்குக் கூடுதல் பொறுப்பாக விக்கெட் கீப்பர் இடத்தைக் கொடுக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயரை போன்ற சாலிட் பேட்ஸ்மேன்களை ஐந்தாவது டவுன் பேட்ஸ்மேனாக முயற்சி செய்து பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

5வது காரணம்

2019 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. சிஎஸ்கே அணி சூப்பர் ஹீரோ தோனி என்பதால் இந்தப் போட்டியில் இருந்து அவர் விளையாடாமல் தப்பிக்க முடியாது. அதில் அவருடைய பர்ஃபாமென்ஸ் மிகவும் கவனிக்கப்படும். ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லையெனில் உலகக் கோப்பை வாய்ப்பை இழக்க நேரிடும்.

ஆஸ்திரேலியா சீரியஸ்

2018ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி. இந்தப் போட்டிக்கு தோனிக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here