சாக்ஷி-யை தாண்டி டோனிக்கு இருக்கும் ரகசிய காதல் கதை..!

0
1242

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்றாலும் மக்களுக்கு எப்போதும் டோனி தான் தல. டெஸ்ட், ஓன் டே, 20-20, ஐபிஎல் என எல்லாப் போட்டிகளிலும் தன்னுடைய தனித் திறன்களை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். டோனியின் சாதனை பற்றிப் பேசினால் இந்த ஒரு கட்டுரை போதாது.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வரும் டோனிக்கு தனது மனைவி சாக்ஷி தாண்டி ரகசிய காதல் கதை இருக்கிறது.

காதல் கதை..

டோனிக்குக் கார் மற்றும் பைக் மீது அளவு கடந்த காதல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு வரும் முன்பே இந்தக் காதல் கதை துவங்கியுள்ளதாக டோனி கூறியுள்ளார். தான் வாங்கிய ஊக்கத் தொகை, பரிசுகள் மூலம் சம்பாதித்த பணத்தில் இருந்து தன் குழந்தை பருவ கனவாக இருந்த பைக்கை தேடிப்படித்து வாங்கியுள்ளார் டோனி. அது எந்தப் பைக் தெரியுமா..?

முதல் பைக்

டோனி வாங்கிய ஊக்கத் தொகையில் சேமித்து வைத்த 4,500 ரூபாயில் முதல் முறையாக ராஜ்தூத் வண்டியை வாங்கியுள்ளார். இதுகுறித்து டோனி தனது டிவிட்டர் பக்கத்தில் அதன் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதைக் கண்டிப்பாகப் புதுப்பித்துப் பயன்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

டோனியின் கனவு பைக்..!

 

ஹார்லி டேவிட்சன், டுக்காடி பைக்கள் வரும் முன்னர், இந்திய சாலைகளை ஆட்சி செய்தது யமஹா ஆர்டி350 பைக் தான். 70களில் பைக் பிரியர்களின் ஓற்றைக் கனவாக இருந்த பைக் இது. டோனிக்கும் இதுதான் அப்போதைய கனவு பைக்.

தொடர் கிரிக்கெட் போட்டிகளின் காரணமாகச் சரியாகப் பாதுகாக்க முடியாத நிலையில் இந்தப் பைக் இருந்த நிலையில், டோனியே களத்தில் இறங்கி முழுமையாகப் பழுது பார்த்து இன்றும் பயன்படுத்தி வருகிறார். சொல்லப்போனால் 70களிலேயே இந்தப் பைக் தயாரிப்பை யமஹா நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

சுசூகி ஷோகன்

80, 90களில் 2 ஸ்ட்ரோக் என்ஜின் கொண்ட பைகுக்களில் சுசூகி ஷோகன் பைக்கிற்குத் தனியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆகவே தான் டோனி தனது பைக் பட்டியலில் ஷோகன்-ஐ சேர்த்துள்ளார்.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார்

டோனியிடம் 2 கிளாசிக் பைக்குகள் உள்ளது, அதில் ஒன்று தான் பிஎஸ்ஏ கோல்டுஸ்டார். இது மணிக்கு 100கிமீ வேகத்திற்குச் செல்லும் திறன் கொண்ட முதல் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் வாகனமாகும். இதில் 500சிசி என்ஜின் உள்ளது.

நார்டான் ஜூப்லி 250

2வது கிளாசிக் பைக் பட்டியலில் டோனி வைத்திருப்பது நார்டான் ஜூப்லி 250, இதற்கு வின்டேஜ் பைக் பிரிவில் தனிச் சிறப்பு உண்டு. இந்தப் பைக்கில் 250சிசி என்ஜின் உள்ளது.

இனி நீங்கள் பார்க்கப்போவது எல்லாம் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல் அதிகவேகமாகச் செல்லும் பைக்குகள்.

ஹெல்கேட் X132

டோனியின் பைக் கராஜில் இருக்கும் விலை உயர்ந்த பைக்குகளில் இதுதான் முதல் இடம் Confederate ஹெல்கேட் X132. இதன் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். உலகம் முழுவதிலும் வெறும் 150 பைக்குகள் மட்டுமே இருக்கும் நிலையில், தென் ஆசியாவிலேயே டோனியிடம் தான் இந்தப் பைக் உள்ளது.

கவாசகி நிஞ்சா ஹெச்2

சூப்பர்பைக் பிரிவில் சுமார் 400கிமீ வேகம் வரையில் செல்லும் ஓரே இருசக்கர வாகனம் கவாசகி நிஞ்சா ஹெச்2. இதை விட்டுவைப்பாரா நம்ம டோனி..? இந்தப் பைக்கின் விலை சுமார் 33 லட்சம்

கவாசகி நிஞ்சா ZX-14R

உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சூப்பர்பைக்-களில் கவாசகி நிஞ்சா ZX-14R-க்கு முதல் இடம். இந்தப் பைக்கின் விலை சுமார் 20 லட்சம்

ஹார்லி

இவ்வளவு பைக்குகளை வாங்கிய டோனி ஹார்லி-ஐ விட்டுவைப்பாரா..? எப்படி முடியும். ஹார்லி டேவிட்சன் பிராண்டில் முக்கிய வாகனம் என்றால் ஹார்லி பேட்பாய் தான், இதன் மதிப்பு 17.50 லட்சம் ரூபாய். டோனியின் காதல் அதோடு நிற்கவில்லை..

ஸ்போர்ட்ஸ்பைக்

யமஹா 1996 முதல் 2007 வரையிலான காலத்தில் அதிகளவில் தாயரித்த ஸ்போர்ட்ஸ்பைக் என்றால் யமஹா தன்டர்கேட் தான். சுமார் 600சிசி என்ஜின் திறன் கொண்ட இந்தப் பைக்கை டோனி வாங்கியுள்ளார்.

டோனியிடம் சுமார் 22 பைக்குகள் உள்ளது. பைக்குகளைத் தாண்டி கார்களிலும் டோனிக்குத் தனிப்பட்ட ரசனை உண்டு.

பெராரி 599 ஜிடிஓ

அதிவேக கார்களில் பிரபலமான ஒன்று பெராரி 599 ஜிடிஓ, இந்தக் காரின் போனெட்டில் இந்திய கொடியை ஆசைஆசையாய் வரைந்து வைத்துள்ளார் டோனி.

டோனியின் கார் பட்டியலில் ஆடி Q7, ஹம்மர் H2, மிட்சுபிஷி பஜிரோ, மிட்சுபிஷி ஆவுட்லேன்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ, லேண்டு ரோவர் ப்ரீலேன்ட் 2 ஆகிய கார்களை வைத்துள்ளார்.

தனி வீடு

இந்தப் பைக்குகளை வைக்க டோனி தனி வீட்டையே கட்டியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் பைக், கார்கள் மீது அவருக்கு இருக்கும் காதலை. இந்த அளவு கடந்த பிரியத்தைக் காதல் என்று சொல்வதில் எவ்வித தவறுமில்லை.

புகைப்படத்திற்குப் பின்னால் இருப்பது தான் டோனியின் கராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here