முதல் இடமும் என்னக்கு தான்.. 2வது இடமும் எனக்குதான்..!

0
254

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் தன் நடிப்பு திறன் வாயிலாக வெற்றி இலக்கை அடைந்த தனுஷ் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் தனுஷ் முதன்முதலில் பிரபலம் அடைந்தது கொலைவெறி பாடல் மூலம் தான். இந்தப் பாடல் தான் யூடியூப்-இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல்களாக உள்ளது. இது தன் வாழ்நாள் சாதனையாகக் கருதப்படும் நிலையில் தற்போது தனுஷ்-க்குப் புதிதாக ஒரு மகுடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெளியான மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெற்றி பெற்ற நிலையில் இந்தப் பாடலின் வீடியோ சாங்கை சுமார் 113 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகப் பார்வையாளர்களை ஈர்த்த தமிழ் பாடல்கள் பட்டியலில் முதல் 2 இடத்தையும் தனுஷ் பெற்றுள்ளார்.

மாரி 2 படத்தில் தனுஷ் சாய் பல்லவி உடன் நடித்தார். இந்நிலையில் தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படத்தின் வச்சிந்தே பாடல் சுமார் 178 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தனுஷ்க்குப் போட்டியாக விளங்குகிறார் சாய் பல்லவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here