ஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி?

0
16842

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது என்றாலே லப்டப் லப்டப் என இதயம் துடிதுடித்து பிபி ஏறும் அளவுக்கு ரசிகர்கள் வெலவெலத்துப் போவார்கள். த்ரில்லான வெற்றியை பெறுவதில் அந்த அளவிற்கு சென்னை அணி பிரசித்தி பெற்றதாக மாறியிருக்கிறது. நேற்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோனி, ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை சுருட்டி அக்கிளில் வைத்துக்கொண்டு நடை போட்டது சி எஸ் கே.

நாங்களாடா வயசானவங்க?
போட்டி தொடங்குவதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனியர்ஸ் டீம். வயதானவர்கள் அணி என கலாய்த்தார்கள். முக்கியமான ப்ளேயர்ஸ் தோனி, பிராவோ, வாட்சன், ஹர்பஜன், ரெய்னா, இம்ரான் தாஹீர், அம்பத்தி ராயுடு என எல்லோருமே 30+ஆக தான் இருக்கிறார்கள். ஆனால் தொட்டதெல்லாம் சிக்ஸர் என பறந்தது. மைதானத்தில் ஒரே சிக்ஸர் மழை. அதி அற்புதமாகவும், திரில்லாகவும் ஆடி, ரசிகர்களை ஆட்டுவித்தனர் இந்த சிங்கங்கள்.

கோஹ்லி சரிவு:
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, துவக்க ஆட்டக்காரர்களாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், க்வின்டனும் களம் இறங்கினர். ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினார்கள். சென்னை அணிக்கோ சரியான சவாலாக இருந்தது. பெங்களூரு ரசிகர்கள் குதூகலம் அடைந்திருந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத வேலையில் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றினார் ரவீந்தர ஜடேஜா. கோஹ்லி பதினைந்து பால்களில் பதினெட்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதிரடி வில்லியர்ஸ்:
கோஹ்லிக்கு பின்னர் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். சிக்ஸராக விளாசி எடுத்தார். எல்லைக் கோட்டை மட்டுமில்லாமல் கேட்டையும் தாண்டி பறந்தது பந்து. வெறிப்பிடித்த ஆட்டமாகதான் நம் கண்களுக்கு தெரிந்தது. குயின் டி காக்கும், வில்லியர்சும் மாரி மாரி சென்னை அணியின் பந்துக்களை சிதறடித்தனர். அரை சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த குயின் டி காக்கை பிராவோ வீழ்த்தினார். தனது 25வது சதத்தை முடித்த கையுடன் வில்லியர்சும் நடையை கட்டினார்.

206 ரன்கள்:
இறுதியாக 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் சிங்கங்கள் மைதானத்தில் களம் இறங்கின. முதல் ஓவரிலேயே பெரிய அதிர்ச்சிதான் கிடைத்தது. தொடக்க அதிரடி ஆட்டக்காரரான வாட்சன் வெறும் ஏழே ரன்களுடன் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து ரெய்னா – ராயுடு ஜோடி சேர்ந்தனர். ராயுடுவின் தீப்பொறி கிளப்பும் ஆட்டத்தால் 5 ஓவர்களில் 50 ரன்களை எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். உமேஷ் யாதவ், ஷாம் பிள்ளிங்க்ஸ், ஜடேஜா ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர்.

தோனியும் ராய்டுவும்:
இறுதியாக கேப்டன் தோனியும் ராயுடுவும் கைக்கோர்த்தனர். பெங்களூரு அணியின் பந்துவீச்சுகளை தக்காளியை பிதுக்குவதைப் போல பிதுக்கி துவம்சம் செய்தார் தோனி. கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட, ஃபினிஷர் தோனி இரண்டு சிக்ஸர் அடித்ததுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை சேர்த்தார். திக் திக் என ஆடியன்ஸ் மனதில் பீதி பீடித்திருக்க, தோனியின் ஆட்டத்தால் திரில்லரான அனுபவத்தை பெற முடிந்தது.

கடைசி பந்து:
கடைசி பந்தை அடித்துவிட்டு தோனி கூலாக நடந்து வரும் ஸ்டைல்தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. “எங்களையாடா கிழட்டு சிங்கங்கள்ன்னு சொல்றீங்க?… இந்தாடா வாங்கிக்கோடா” என அவரது நடையே வசனம் பேசியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here